சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியின் தனித்துவமான சாதனைகள் ஒரு பார்வை..!! | dhoni ipl records for csk team

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் தனது அதிரடி பேட்டிங், சிறந்த விக்கெட் கீப்பிங் மற்றும் அசத்தல் கேப்டன்சி மூலம் பல சாதனைகளை ஐபிஎல் அரங்கில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி படைத்துள்ள சாதனைகள் பற்றி காண்போம்.
ஐபிஎல் தொடரில் உள்ள முன்னணி வீரர்கள் பட்டியலில் முக்கிய ஒருவராக இடம் பெற்றுள்ள எம்.எஸ்.தோனி உடைய கடைசி ஐபிஎல் தொடராக 2023 ஆம் ஆண்டு தொடர் அமைய பெரிய அளவில் வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளார்கள். இத்தனை ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சிறப்பான தரமான சம்பவங்கள் செய்து வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.
ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை 2022 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் அடையாளமாகவும் விளக்கும் எம்.எஸ்.தோனி உடைய சாதனைகள் ஐபிஎல் வரலாற்றிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றிலும் என்றும் நீங்காத இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி படைத்துள்ள சாதனை துளிகள் :
1) ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 204 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்
2) ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இதுவரை 196 போட்டிகளில் செயல்பட்டுள்ளார்.
3) ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக 208 சிக்ஸர்கள் பதிவு செய்து அசத்தியுள்ளார்.
4) ஐபிஎல் தொடரில் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸர் மழை பொழிந்த உள்ள எம்.எஸ்.தோனி , இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 199 சிக்ஸர்கள் பதிவு செய்துள்ளார்.
5) ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வைத்து கேப்டன் எம்.எஸ்.தோனி மிகப்பெரிய தனித்துவமான சாதனை படைத்துள்ளார்.
6) ஐபிஎல் தொடரில் 210 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு எம்.எஸ்.தோனி அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
7) ஐபிஎல் தொடரில் 4 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சாம்பியன் பட்டம் பெற்று தந்ததன் மூலம், அதிக சாம்பியன் பட்டம் பெற்ற 2வது கேப்டன் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.
8) ஐபிஎல் தொடரில் சிறந்த விக்கெட் கீப்பராக விளங்கும் தோனி 234 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார், குறிப்பாக இதில் 131 கேட்ச் மற்றும் 39 ஸ்டம்பிங்கள் செய்துள்ளார்.
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது, இந்நிலையில் இந்த 2023 ஆம் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணி அசத்தல் வெற்றிகளை பெற கேப்டன் எம்.எஸ்.தோனி முக்கிய காரணமாக இருப்பார் என்று கூறினால் மிகையில்லை.