சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி அசத்தல் சாதனை..!! | dhoni record for csk 2023

ஐபிஎல் 2023 ஆம் தொடரின் ஆரம்ப போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்ஸர் மழை பொழிந்து அசத்தினார்கள், குறிப்பாக இந்த போட்டியில் சிக்ஸர் மன்னன் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி முக்கிய சாதனையை படைத்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தியது, குறிப்பாக அணியின் முன்னணி வீரர் ருதுராஜ் கைக்கவாட் 92(50) ரன்கள் பதிவு செய்து அசத்தினர். இதே போட்டியில் இறுதியாக களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து 14(7) ரன்கள் பெற்றார், இந்நிலையில் சென்னை அணி 178 ரன்கள் பதிவு செய்தது.
குஜராத் அணிக்கு எதிராக சென்னை அணியின் நாயகன் எம்.எஸ்.தோனி அடித்து அந்த சிக்ஸர் மூலம் சென்னை அணிக்காக தனது 200 வது சிக்ஸரை பதிவு செய்தார், இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 200 சிக்ஸர்கள் பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் தோனியும் இணைந்து சாதனை படைத்தார்.
ஐபிஎல் அரங்கில் ஒரு அணிக்காக 200 சிக்சர்கள் பதிவு செய்த வீரர்கள் பட்டியல் முறையே
1) கிறிஸ் கெய்ல்,
2) ஏபி டி வில்லியர்ஸ்,
3) விராட் கோலி
4) கீரன் பொல்லார்ட்
இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது 5வது வீரராக எம்.எஸ்.தோனி இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது, ஐபிஎல் 2023 தொடரில் முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி தலைமையில் வெற்றிகளை பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.