ஐசிசி ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் முகமது சிராஜ் சறுக்கல்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய ஒரு நாள் போட்டியில் முகமது சிராஜ் சுமாரான பவுலிங்கை வெளிப்படுத்திய நிலையில், ஐசிசி ஒருநாள் தொடர் தரவரிசையில் பின்னடைவை அடைந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி பவுலர் முகமது சிராஜ் சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஐசிசி ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் சிராஜ் சிறப்பான பங்களிப்பை அளிக்க தவறியதால், ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந்த சிராஜ் 3 வது இடத்திற்கு சென்றுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து பவுலர் ஜோஷ் ஹேஸில்வுட் ஐசிசி ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார், அடுத்து நியூசிலாந்து அணியை சேர்ந்த ட்ரெண்ட் போல்ட் 2வது இடத்தை பிடித்துள்ளார், அவரை தொடர்ந்து 3 வது இடத்தில் இந்திய அணியின் முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 7 ஓவர்கள் வீசி 1 ஓவர் மெய்டன் செய்து 37 ரன்கள் வழங்கி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்காக ஜஸ்பிரீத் பும்ரா இல்லாத நேரத்தில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி அணியின் பவுலிங் யூனிட்டை தலைமை தாங்கியவர் முகமது சிராஜ் என்று கூறினால் மிகையில்லை, எனவே விரைவில் அடுத்து வரும் போட்டிகளில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு உலக கோப்பை தொடரில் முக்கிய பவுலராக திகழ்வார் என்று ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.