உலகின் நம்பர்-1 பவுலர் ஆனார் முகமது சிராஜ்..! ரசிகர்கள் புகழாரம்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 25, 2023 & 17:38 [IST]

Share

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தி வந்த முகமது சிராஜ், தற்போது ஐசிசி ஒருநாள் தொடர் தரவரிசையில் நம்பர் 1 பவுலர் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக பவுலிங் செய்து உலகின் முன்னணி பவுலராக  வளர்ச்சி அடைந்துள்ள சிராஜ் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்திய அணியில் சார்பில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பான பவுலிங்கை சிராஜ் வெளிப்படுத்தினார், குறிப்பாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 9 விக்கெட்டுகளும், நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை  கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து பவுலர் ஜஸ்பிரிட் பும்ரா பிறகு ஐசிசி தரவரிசையில் ஒருநாள் தொடரில் முதல் இடத்தை பிடித்து முகமது சிராஜ் சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்காக 2022 ஆம் ஆண்டில் அனைத்து வித தொடர்களிலும் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி வெற்றிக்கு உதவினார்.

முகமது சிராஜ்  ஆரம்ப காலத்தில் பல தரப்பில் இருந்து பல விதமான விமர்சனங்களுக்கு உள்ளானர், அதில் இருந்து மீண்டு கடின முயற்சிகள் மூலம்   தற்போது உலகின் நம்பர் 1 பவுலர் என்ற இடத்தை அடைந்துள்ளார். ஐசிசி ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் 729 புள்ளிகளுடன் முகமது சிராஜ் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்திய அணியில் முன்னணி பவுலர் பும்ரா இல்லாத நிலையில் சிராஜ் தனது திறமையான பௌலிங் மூலம் அணிக்கு பக்கபலமாக இருந்துள்ளார், இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல முகமது சிராஜ் முக்கிய காரணமாக இருப்பார் என்பதில் ஐயமில்லை என்று ரசிகர்கள் அவரை பாராட்டி தங்களின் வாழ்த்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.