IND VS AUS TEST 2023 : முக்கிய வீரரை 4வது டெஸ்ட் போட்டியில் களமிறக்க இந்திய அணி முடிவு..!! கட்டாய வெற்றிக்கு மாஸ்டர் பிளான்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில், இந்த தொடரில் கடைசி டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளதால் முக்கிய வீரரை களமிறக்க இந்திய அணி சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில், கடைசியாக நடந்த 3 வது டெஸ்ட் போட்டியில் புதிய கேப்டன் ஸ்மித் தலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அசத்தல் வெற்றி பெற்று இந்திய அணிக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது.
அதே சமயத்தில் இந்திய அணி 2 வெற்றிகள் பெற்று தொடரில் முன்னலையில் இருந்தாலும், கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இறுதி டெஸ்ட் போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி அனைத்து வகையிலும் தயாராகி வரும் இந்திய அணி சார்பில் 3 வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்க பட்ட முன்னணி பவுலர் முகமது ஷமியை மீண்டும் அணியில் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி சார்பில் வீரர்களுக்கு பணி சுமையை குறைக்கும் வகையில் சரியான இடைவெளியில் ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி அசத்திய முன்னணி பவுலர் ஷமிக்கு 3 வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதில் அணியில் விளையாட உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் பதில் முகமது ஷமி விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியில் முக்கிய பவுலராக முகமது சிராஜ் விளங்குவார் என்பதால், அவருக்கு ஓய்வு அளிக்கும் விதத்திலும், மேலும் 3 வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கும் விதத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி 4வது டெஸ்ட் போட்டியில் வரும் மார்ச் 9ஆம் தேதி முதல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த போட்டியில் இரு அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கி விளையாட உள்ளதால் போட்டியில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.