IND VS AUS TEST 2023 : 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஸ்டார்க் எக்ஸ்பிரஸ் …!! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில், 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் காயத்தில் இருந்து மீண்டு உள்ள ஸ்டார்க் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இந்திய அணி உள்ள நிலையில், அடுத்து நடக்க உள்ள 3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா அணியில் இருந்து காயம் காரணமாக தொடக்க வீரர் டேவிட் வார்னர், வேகப்பந்து பௌலர் ஹேசில்வுட் ஆகியோர் தொடரில் இருந்து விலகி அணிக்கு பின்னடைவு அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு மேலும் சோகம் அளிக்கும் வகையில் அணியின் கேப்டன் மற்றும் முன்னணி பவுலர் பேட் கம்மின்ஸ் தவிர்க்க முடியாத காரணத்தால் 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார், இதையடுத்து அணியை வழிநடத்த ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மோசமான நிலையில் இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு வலு சேர்க்கும் விதத்தில் அணியில் காயத்தில் இருந்து மீண்டு உள்ள மிச்செல் ஸ்டார்க் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது, இது குறித்து பேசிய ஸ்டார்க் நான் இன்னும் 100 சதவீத உடல் தகுதியை அடைய வில்லை ஆனால் 3 வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினார்.
அதாவது கடந்த ஆண்டு கையில் காயம் அடைந்த ஸ்டார்க் தொடர்ந்து ஓய்வில் இருந்தார், மேலும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் பெற்றாலும் முதல் 2 டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் தான் இருந்தார்.தற்போது ஆஸ்திரேலியா சார்பில் 3 வது டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராகி உள்ள ஸ்டார்க் கூறியது, நான் முழுமையான உடல் தகுதியுடன் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றால் இதுவரை 5-10 டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடி இருப்பேன் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய ஸ்டார்க் தனது 12 வருட கிரிக்கெட் பயணத்தில் வலியுடன் போட்டிகளில் பங்கேற்க பழகி விட்டேன் என்று கூறினார்,மேலும் இந்திய மைதானங்களில் ஸ்பின்னர்கள் சிறப்பாக பௌலிங் செய்த போதும் இந்திய அணியின் வேகப்பந்து பவுலர்கள் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி உள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணிக்காக தானும் அந்த அப்பணியை செய்ய வேண்டும் என்று கூறினார்.மேலும் ஆஸ்திரேலியா அணியின் ப்ளேயிங் லெவனில் கேமெரூன் கிரீன் இடம்பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் மிச்செல் ஸ்ட்ராக் கண்டிப்பாக இடம் பெறுவர் என்று தெரியவந்துள்ளது, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3வது டெஸ்ட் போட்டியில் மார்ச் 1 ஆம் தேதி இந்தோரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.