கேமரன் கிரீனின் மிரட்டல் சதம்...மும்பை அபார வெற்றி | SRH vs MI IPL 2023 Match Highlights

மே 21 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் ஐபிஎல் 2023 தொடரின் 69வது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்:
முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் விவ்ராந்த் சர்மா (69), மயங்க் அகர்வால் (83), ஹென்ரிச் கிளாசென் (18), க்ளென் பிலிப்ஸ் (1) மற்றும் ஹாரி புரூக் (0) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து ஐடன் மார்க்ராம் (13) மற்றும் சன்விர் சிங் (4) அவுட் ஆகாமல் இருந்தனர். மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் மத்வால் (4), கிறிஸ் ஜோர்டான் (1) விக்கெட் எடுத்து ஹைதெராபாத் அணியை கதறவிட்டனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தனர்.
மும்பை இண்டியன்ஸ் பேட்டிங்:
அவர்களைத் தொடர்ந்து விளையாட வந்த மும்பை அணியினர் அசால்டாக விளையாடி ஹைதெராபாத் அணியை திணறவிட்டனர். இஷான் கிஷன் (14) மற்றும் ரோஹித் சர்மா (56) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேமரன் கிரீன் (100) மற்றும் சூர்யகுமார் யாதவ் (25) அவுட் ஆகாமல் விளையாடி அணியை வெற்றியடைய செய்தனர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.