சூரியகுமார் யாதவின் மிரள வைக்கும் பேட்டிங்...மும்பை அணி வேற லெவல் வெற்றி | MI vs GT IPL 2023 Match Highlights

வான்கடே மைதானம் நேற்று [மே 12, 2023] ஐபிஎல் 2023 தொடரின் 57வது லீக் போட்டி மும்பை இண்டியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
மும்பை அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா முதலில் களத்தில் இறங்கினர். போட்டியின் ஆரம்பித்தில் இருந்தே இருவரும் குஜராத் அணியின் பந்து வீச்சை அசால்டாக வீசி அடித்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பில் மட்டுமே மும்பை அணி 61 ரன்கள் எடுத்தது. இருப்பினும் 6வது ஓவரில் இஷான் கிஷன் (31) மற்றும் ரோஹித் சர்மா (29) இருவரும் ஆட்டமிழந்தனர். அடுத்த களமிறங்கிய சூரியகுமார் யாதவ் இந்த போட்டியில் 4 சிக்ஸ், 11 பௌண்டரி என்று வெறித்தனமாக விளையாடி அசத்தினார். அவருக்கு பின்னர் விளையாட வந்த நேஹால் வதேரா(15), விஷ்ணு வினோத்(30) மற்றும் திம் டேவிட் (5) ஆகியோர் அவுட் ஆகிவிட்டனர். போட்டியின் முடிவில் சூர்யகுமார் யாதவ் (103) மற்றும் கேமரன் க்ரீன் (3) அவுட் ஆகாமல் இருந்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் மும்பை அணி 218/5 ரன்கள் எடுத்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் விருத்திமான் சாஹா (2), ஷுப்மான் கில் (6), ஹர்திக் பாண்டியா (4), விஜய் சங்கர் (29), டேவிட் மில்லர் (41), அபினவ் மனோகர் (2), ராகுல் திவாதியா (14), நூர் அகமது (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியின் இறுதியில் ரஷித் கான் (79), அல்ஜாரி ஜோசப் (7) ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் மத்வால் (3), பியூஷ் சாவ்லா (2), குமார் கார்த்திகேயா (2) விக்கெட்டுகள் எடுத்து குஜராத் அணியை கதற விட்டனர். போட்டியின் முடிவில் மும்பை இண்டியன்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.