மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான கணிப்புகள் அடங்கிய முக்கிய தகவல்கள்..!! | mi vs rr 2023 ipl prediction
![மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான கணிப்புகள் அடங்கிய முக்கிய தகவல்கள்..!! | mi vs rr 2023 ipl prediction](https://www.sportspartans.com/assets/uploads/news-2207.jpg)
ஐபிஎல் 2023 அரங்கில் இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் அடுத்தாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளார்கள். இந்த மிரட்டல் போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு மற்றும் ட்ரீம் லெவன் டீம் கணிப்பு உள்ளிட்ட விவரங்களை காண்போம்.
இந்த ஐபில் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி சற்று வெற்றிகளை பெற தடுமாறி வருகிறது, இதுவரை 7 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் பின்தங்கி உள்ளது. அதே சமயத்தில் நடப்பு தொடரில் அதிரடி அணியாக விளங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
போட்டி குறித்த விவரம் :
42 வது லீக் போட்டி : மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & ஞாயிற்றுக்கிழமை
தேதி : 30 ஏப்ரல் 2023
மைதானம் : வான்கடே மைதானம், மும்பை.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்கள் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவிக்க உதவும் தன்மை கொண்டதாகவும், இருபக்கமும் மிகவும் குறைவான பவுண்டர்களை உடையது என்பதால் ரன் மழை பொழியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு சராசரி இலக்காக 180 ரன்கள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - ஜோஸ் பட்லர்
துணை கேப்டன் - ரோகித் சர்மா
விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன்
பேட்ஸ்மேன்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் , திலக் வர்மா
ஆல்-ரவுண்டர்கள் - கேமரூன் கிரீன், ரவிச்சந்திரன் அஸ்வின்
பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், ரிலே மெரிடித், பியூஷ் சாவ்லா.
வெற்றி கணிப்பு :
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை தற்போதைய நிலையில் தொடரில் முன்னேற்றம் இனி வரும் போட்டிகளில் அடைய கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் போட்டிகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் மும்பை அணிக்கு இந்த போட்டியின் வெற்றி மிகவும் முக்கியமானதாகும்.
அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடரில் உள்ள முன்னணி அணிகளை வீழ்த்தி மிரட்டல் வெற்றிகளை பெற்று அதிரடி பார்மில் உள்ளது, எனவே மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தனது வெற்றி பயணத்தை தொடர கட்டாயம் முழு வீச்சில் செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றிக்கான வாய்ப்பு தொடரில் சிறந்த பார்மில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தான் மும்பை இந்தியன்ஸ் அணியை விட அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான ) : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(w/c), ஷிம்ரோன் ஹெட்மையர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான ) : ரோகித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(வி.கீ), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, குமார் கார்த்திகேயா, அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.