மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி குறித்த முக்கிய கணிப்புகள்..!! ஒரு பார்வை ..!! | mi vs kkr 2023 prediction

இந்திய மண்ணில் மிகவும் அதிரடியாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 தொடரில் அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளார்கள். இந்த போட்டிக்கான பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு, பிளேயிங் லெவன், ட்ரீம் லெவன் கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த 2023 தொடரானது மிகவும் சிறப்பாக அமையவில்லை, எனினும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய ரோஹித் சர்மா தலைமையில் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை கடைசியாக நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பதிவு செய்தது.
அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் மிரட்டல் வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது, மற்ற அணிகளை துவம்சம் செய்யும் அதிரடி அணியாக வலம் வருகிறது. ஆனால் கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி குறித்த விவரம் :
22 வது லீக் போட்டி : சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
நேரம் & நாள் : 3:30 p.m & ஞாயிற்றுக்கிழமை
தேதி : 16 ஏப்ரல் 2023
மைதானம் : வான்கடே மைதானம், மும்பை.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள மும்பை வான்கடே மைதானம் ஸ்பின்னர்கள் காட்டிலும் வேகப்பந்து பவுலர்களுக்கு மிகவும் உதவும் தன்மை கொண்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. மேலும் பேட்ஸ்மேன்கள் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த மிகவும் உதவும் தன்மையை கொண்டதாக வான்கடே மைதானத்தின் பிட்ச் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் அதிரடி ஆட்டம் இரு அணிகள் சார்பில் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன்: ரோஹித் சர்மா
துணை கேப்டன்: நிதிஷ் ராணா
விக்கெட் கீப்பர்: இஷான் கிஷன்
பேட்ஸ்மேன்கள் : திலக் வர்மா, ரிங்கு சிங்,
ஆல்-ரவுண்டர்கள்: கேமரூன் கிரீன், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன்
பந்துவீச்சாளர்கள்: ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி.
வெற்றி கணிப்பு :
ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது தனது முதல் வெற்றியை ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் பதிவு செய்துள்ளது, எனவே தனது வெற்றி பயணத்தை தொடர மும்பை அணி முழுவீச்சில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் ஐபிஎல் அரங்கில் அசத்தல் அணியாக விளங்கும் நிதிஷ் ராணா தலைமையில் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த போட்டியில் போட்டியில் போராடி தோல்வியை தழுவி உள்ளதால், கட்டாயம் இந்த போட்டியில் வெற்றி பெற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.
இந்நிலையில் தற்போதைய நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் இரண்டிற்கும் வெற்றி வாய்ப்பு சம அளவில் உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(வி.கீ), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், ரிலே மெரிடித், அர்ஷத் கான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ரஹ்மானுல்லா குர்பாஸ்(வி.கீ), என் ஜெகதீசன், நிதிஷ் ராணா(கேப்டன் ), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், சுயாஷ் சர்மா, லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி.