டெல்லி மற்றும் மும்பை மோதும் போட்டிக்கான டாஸ் & பிளேயிங் லெவன் அப்டேட்..!! | mi vs dc live score 2023

ஐபிஎல் 2023 அரங்கில் 16 வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் முதல் வெற்றியை நோக்கி பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் போன்ற முக்கிய விவரங்கள் வெளியானது.
இந்திய மண்ணில் மிரட்டலாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் இன்னும் ஒரு வெற்றி கூட பதிவு செய்ய முடியாமல் முன்னணி அணிகளாக உள்ள டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் தவித்து வருகிறார்கள்.ஐபிஎல் அரங்கில் புதிய கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்கி விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் வெற்றி பெற போராடி வருகிறது.
இதுவரை தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை, அதேபோல் ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்று முன்னணி அணியாக ரோஹித் சர்மா தலைமையில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஆண்டில் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை தழுவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணி இரண்டில் கட்டாயம் ஒரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துவிடும் என்பது உறுதி, எனவே இந்த வெற்றியை பெற இரு அணிகளும் கட்டாயம் முழுவீச்சில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய டேவிட் வார்னர் தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயிங் லெவன் : பிருத்வி ஷா, டேவிட் வார்னர்(கேப்டன்), மனிஷ் பாண்டே, யாஷ் துல், ரோவ்மேன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல்(வி.கீ), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தபிசுர் ரஹ்மான்.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன் : ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(வி.கீ ), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், அர்ஷத் கான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், ரிலே மெரிடித்.