முதல் வெற்றியை பதிவு செய்ய பரபரப்பாக நடந்த போட்டி..!! இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி..!! | mi vs dc ipl 2023 highlights

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள். இந்த போட்டியில் இரு அணிகள் சார்பிலும் முதல் வெற்றியை பதிவு செய்ய இறுதி பந்து வரை போராட்டம் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் உடனுக்குடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், அதே சமயத்தில் கேப்டன் டேவிட் வார்னர் பொறுப்புடன் நிதானமாக விளையாடிய அரைசதம் கடந்து எ அணிக்கு ரன்கள் குவித்தார். அதன்பின் களத்தில் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் சிக்ஸர்கள் பறக்கவிட்டு அரைசதம் கடந்து அணி நல்ல இலக்கை அடைய உதவினார்.
இந்நிலையில் இறுதி ஓவர்களில் மும்பை அணி மீண்டும் களத்தில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்திய நிலையில் டெல்லி கேபிட்டல்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் பதிவு செய்து அசத்தியது. அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணி பவர் பிளே முடிவில் 68 ரன்கள் பதிவு செய்தது, குறிப்பாக இளம் வீரர் இஷான் கிஷான் 31(26) ரன்கள் பதிவு செய்து பெவிலியன் திரும்பினார். மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் பதிவு செய்து அசத்தினார்.
அதன்பின் களத்தில் அதிரடியை காட்ட தொடங்கிய இளம் வீரர் திலக் வர்மா டெல்லி அணி பவுலர்களை நாலாபக்கமும் சிதறடித்து ரன்கள் பெற்ற வேளையில் எதிர்பாராத விதமாக 41(28) ரன்கள் பெற்று ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மும்பை அணியின் மிரட்டல் வீரர் சூர்யா குமார் யாதவ் முகேஷ் குமார் பவுலிங்கில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா களத்தில் இருக்கும் வரை வெற்றிக்கான நம்பிக்கை உள்ளது என்று மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், டெல்லி பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய பந்தை ரோகித் சர்மா அடுத்த போது விக்கெட் கீப்பர் அபிஷேக் போரல் சிறப்பாக செயல்பட்டு கேட்ச் பிடித்து அசத்தினார்.
இதன்மூலம் மும்பை அணியின் நாயகன் ரோஹித் 65(45) ரன்களில் பெவிலியன் திரும்பினார். தற்போது டெல்லி அணி பக்கம் சற்று போட்டியின் வெற்றி நகர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல் வெற்றியை பதிவு செய்ய மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பில் இறுதி பந்து வரை விறுவிறுப்பான போட்டி நடைபெற்றது, இதில் டெல்லி பவுலர் அன்ரிச் நார்ட்ஜே சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி மும்பை வீரர்கள் ரன்கள் பெற முடியாமல் செய்த நிலையில் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை பட்ட போது சிறப்பாக செயல்பட்டு மும்பை இந்தியன்ஸ் வெற்றியை பதிவு செய்தது, அதே சமயத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மீண்டும் 4வது முறையாக தொடர் தோல்வியை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.