பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் மிரட்டல் வெற்றி..!!! | mi victory against pbks 2023
![பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் மிரட்டல் வெற்றி..!!! | mi victory against pbks 2023](https://www.sportspartans.com/assets/uploads/news-2233.jpg)
ஐபிஎல் 2023 தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள். இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் கிங்ஸ் அணியை சிதறடித்து மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றியை பதிவு செய்தார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் களமிறங்கினார் கள். அதாவது அணியின் முன்னணி வீரர்கள் சொதப்பிய நிலையில் அதிரடியாக விளையாடிய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் 42 பந்துகளில் 82 ரன்கள் பதிவு இறுதி வரை களத்தில் இருந்தார்.
அதேபோல் அணியின் அதிரடி வீரர் ஜிதேஷ் சர்மா 49*(27) லிவிங்ஸ்டோன் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்கள் பதிவு செய்து அசத்தினார்.ஐபிஎல் அரங்கில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் பதிவு செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து பஞ்சாப் அணி அளித்த இலக்கை அடைய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், குறிப்பாக அணியின் இளம் அதிரடி வீரர் இஷான் கிஷான் 41 பந்துகளில் 75 ரன்கள் பதிவு செய்து பஞ்சாப் பவுலர்களை துவம்சம் செய்து ஆட்டமிழந்தார். அதன்பின் மும்பை அணியின் அனுபவ வீரர் சூர்யகுமார் யாதவ் களத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 66(31) ரன்கள் பதிவு செய்து அசத்தினார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 18.5 ஓவரிலேயே பஞ்சாப் அணி அளித்த இலக்கை அடைந்து அசத்தல் வெற்றி பதிவு செய்தார்கள். இந்த ஐபிஎல் 2023 தொடரில் முன்னதாக பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில் மும்பை அணியை தோற்கடித்து பஞ்சாப் அணி பெற்ற வெற்றிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது என்று கூறினால் மிகையில்லை.