மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தல்..!! சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத் ஏமாற்றம்..!! | mi stunning win vs srh in ipl 2023

இன்று ஐபிஎல் 2023 தொடரில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மிரட்டல் பவுலிங்கை வெளிப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்று அசத்தியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ஹோம் கிரௌண்டில் தோல்வியை தழுவி ஏமாற்றத்தை அளித்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிரட்டல் பவுலிங்கில் திணறி ஆட்டமிழந்த நிலையில், மிகவும் பொறுப்புடன் இறுதிவரை விளையாடிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிறீன் 40 பந்துகளில் 64 ரன்கள் பெற்று அசத்திய நிலையில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 192 ரன்கள் பதிவு செய்தது.
இதையடுத்து மும்பை அணி அளித்த இலக்கை அடைய களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் ஹார்ரி புரூக் 9(7) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய அணியின் அனுபவ வீரர்கள் ராகுல் திரிபாதி 7(5) , ஐடென் மார்க்கரம் 22(17) உடனுக்குடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தார்கள்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இடையில் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி 36(16) ரன்கள் பெற்று ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார், அவரை தொடர்ந்து ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் ஆடிய மயங்க அகர்வால் 48(41) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியின் அருகில் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் இறுதி வரை போராடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி துவம்சம் செய்தது, குறிப்பாக மும்பை அணி சார்பில் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், ரிலே மெரிடித்
ஆகியோர் சிறப்பான பவுலிங்கை வெளிபடுத்தி தலா 2 விக்கெட்டுகளை பெற்றார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இறுதி ஓவரை வீசிய இளம் வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்தி தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றி மும்பை அணிக்கு வெற்றியை பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2023 தொடரை தோல்விகள் உடன் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று அசத்தி தனது நிலையை நிரூபித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.