ரோஹித் சர்மா அதிரடியில் மும்பை அணி முதல் வெற்றி..!! | mi rohit sharma ipl 2023
![ரோஹித் சர்மா அதிரடியில் மும்பை அணி முதல் வெற்றி..!! | mi rohit sharma ipl 2023](https://www.sportspartans.com/assets/uploads/news-2080.jpg)
ஐபிஎல் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் வெற்றியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெற்றது, இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடைய அதிரடி ஆட்டம் தான் காரணம் என்று கூறினால் மிகையில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் அரங்கில் ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பல நாட்கள் ஆகிறது, அதே சமயத்தில் நடப்பு தொடரில் மும்பை அணி ஒரு வெற்றி கூட பெற முடியாமல் தவித்து வந்தது. இந்த நிலையை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அணியின் நம்பிக்கையாக விளங்கும் கேப்டன் ரோஹித் சர்மா கட்டாயம் மாற்றுவார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.
அதற்கு ஏற்றார் போல் டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எதிரணி பவுலர்களை துவம்சம் செய்து சிக்ஸர்கள் பறக்க விட்டார், குறிப்பாக நீண்ட நாட்கள் கழித்து ஐபிஎல் அரங்கில் அரைசதம் பதிவு செய்து அசத்தினர்.இந்த போட்டியில் ரோகித் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் உட்பட 45 பந்துகளில் 65 ரன்கள் பெற்றார்.
மும்பை அணியின் கேப்டன் பார்முக்கு திரும்பியதை பார்த்த அணி வீரர்கள் கட்டாயம் இந்த போட்டியில் வெற்றியை பெற்றாக வேண்டும் என்று எண்ணத்தில் இறுதிவரை போராடி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை இறுதி பந்தில் தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.