சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அசத்தல் பவுலிங்..!! கேமரூன் கிரீன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் தேற்றம்..!! | mi batting vs srh 2023

ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியை அசத்தல் பௌலிங்கை வெளிப்படுத்தி ஹைதராபாத் அணி பவுலர்கள் சிதறடித்தார்கள். மும்பை அணி சார்பில் பொறுப்புடன் விளையாடிய கேமரூன் கிரீன் அணி நல்ல இலக்கை பதிவு செய்ய உதவினார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் ஐடென் மார்க்கம் பௌலிங்கை தேர்வு செய்தார்.இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர் மற்றும் கேப்டன் ஆன ரோஹித் சர்மா சிறப்பாக ஆட்டத்தை தொடங்கி அசத்திய வேளையில் ஹைதெராபாத் அணி பவுலர் நடராஜன் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்து விளையாடி வந்த அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் மற்றும் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ரன்கள் பெற தொடங்கிய வேளையில், நன்றாக விளையாடி கொண்டிருந்த இஷான் கிஷான் ஹைதராபாத் அணி பவுலர் மார்கோ ஜான்சன் இடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். மேலும் அதே ஓவரில் மார்கோ ஜான்சன் அனுபவ வீரர் சூர்யா குமார் யாதவ் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
மும்பை அணிக்காக சிறப்பாக தனியாக விளையாடி வந்த கேமெரூன் கிறீன் உடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மா 37(17) மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வேகமாக ரன்கள் குவித்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதே சமயத்தில் பொறுப்புடன் விளையாடி வந்த கேமரூன் கிரீன் அரைசதம் பதிவு செய்து அசத்தினார்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் கிறீன் 2 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரி உட்பட 64*(40) ரன்கள் பதிவு செய்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் பதிவு செய்தது. இந்நிலையில் மும்பை அணி அளித்த இலக்கை ஹைதெராபாத் அணி அடையுமா..?? ஹாட்ரிக் வெற்றியை எந்த அணி பதிவு செய்யும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.