WOMEN’S T20 WORLD CUP 2023 : பாண்டிங், எம்.எஸ்.தோனியை பின்தள்ளி ஆஸ்திரேலியா கேப்டன் மெக் லானிங் மாபெரும் சாதனை.!!

தென்னாப்பிரிக்கா மண்ணில் மகளிர் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வந்த நிலையில் இறுதி போட்டியில் 6 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஆஸ்திரேலியா மகளிர் அணி அசத்தியது, சர்வதேச உலக கோப்பை அரங்கில் ஆஸ்திரேலியா கேப்டன் மெக் லானிங் சாதனை படைத்தார்.
உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அதிரடியாக மோதிய நிலையில், 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி உலக கோப்பை கைப்பற்றி அசத்தியது. சர்வதேச அரங்கில் ஆஸ்திரேலியா அணியின் 6 வது டி20 உலக கோப்பை ஆகும் மேலும் தொடர்ந்து 3 வது முறையாக ஆஸ்திரேலியா அணி கைப்பற்றி மிரட்டியுள்ளது.
அதாவது சர்வதேச அளவில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 2010, 2012, 2014, 2018, 2020 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்று அசத்தி உள்ளது, மேலும் ஆஸ்திரேலியா மகளிர் அணியின் கேப்டன் மெக் லானிங் 5 ஐசிசி உலக கோப்பையை பெற்று ஆஸ்திரேலியா ரிக்கி பாண்டிங் மற்றும் இந்தியாவின் எம்.எஸ்.தோனி ஆகியோரை பின்தள்ளி அதிக முறை ஐசிசி உலக கோப்பை பெற்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.
ஆஸ்திரேலியா ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி உலக கோப்பை மற்றும் 2006 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி கோப்பைகளை கைப்பற்றி 4 முறை ஐசிசி உலக கோப்பை பெற்றார், அடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி ஆகியவற்றை பெற்று 3 முறை ஐசிசி கோப்பைகள் பெற்றார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2023 மகளிர் டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா அணியின் 30 வயது கேப்டன் மெக் லானிங் கைப்பற்றிய நிலையில், 5வது முறையாக ஐசிசி உலக கோப்பை பெற்று மெக் லானிங் ( 2014, 2018, 2020, 2022 மற்றும் 2023) முன்னாள் கேப்டன்கள் பாண்டிங் , தோனி ஆகியோரை பின்தள்ளி அதிக முறை ஐசிசி உலக கோப்பை பெற்ற கேப்டன் என்ற மாபெரும் சாதனை படைத்து வரலாற்றில் புதிய மைல்கல்லை பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது