ஐ.பி.எல் 2023 : தசுன் ஷனக ஐபிஎல் தொடரில் களமிறங்க வாய்ப்பு..! மலிங்கா கணிப்பு ..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 06, 2023 & 12:40 [IST]

Share

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடிய 2-வது டி20 போட்டியில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் அசத்திய இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனக கிரிக்கெட் வட்டாரங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்,மேலும் இவரை ஏன் ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியின் எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இலங்கை அணிக்காக கடந்த ஆசிய கோப்பையில் இருந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் வீரர் தசுன் ஷனக, இவர் தனது அதிரடியான  பேட்டிங்கால் பல போட்டிகளில் வெற்றியை பெற்று தந்துள்ளார் மேலும் அணியின் கேப்டனாக சிறப்பாக பங்காற்றி வருகிறார்.

தசுன் ஷனக சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் பதிவு செய்து பங்கேற்றார்,தனது அடிப்படை விலையாக  50 லட்சத்தை நியமித்திருந்தார்.இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காமல் ஆச்சரியத்தை அளித்தது,இந்நிலையில் நேற்று நடந்து டி-20 போட்டியில் அணியின் கேப்டன் ஷனக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி  56*(22) ரன்களை அடித்து அரங்கத்தை அதிர வைத்தார்.

அடுத்தாக அந்த போட்டியில் இறுதி ஒவரை வீசி 2 விக்கெட்களை பெற்று அணியின் வெற்றிக்கு பெரிதும்  உதவினார்,இவரின் அற்புதமான ஆட்டத்தை பார்த்த கிரிக்கெட் வல்லுநர்கள் ஏன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் இவரை ஏலத்தில் எடுக்க முற்படவில்லை என்று கருத்துக்களை பகிர்ந்தார்கள்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் இவரை வாங்கி இருந்தால் அணியின் கேப்டனாகவும்  சிறந்த பேட்ஸ்மேனாக வும் பெரிதும் உதவி இருப்பார் என்று தங்களின் கருத்தை இணையத்தில் பலரும் பதிவு செய்தனர்.இதற்கு இலங்கை அணியின் முன்னாள் அதிரடி பவுலர் மலிங்கா கண்டிப்பாக ஐபில் தொடரில் பங்கேற்க  தசுன் ஷனகக்கு  வாய்ப்பு வரும் என்று கூறினார்.   

இதுவரை இந்திய அணிக்கு எதிராக  தசுன் ஷனக கடைசி ஐந்து டி20 போட்டியில் அடித்த ரன்கள் 47*(19), 74*(38), 33*(18), 45(27), 56*(22),மேலும் இந்திய அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் 400 ரன்களுக்கு அதிகமாக அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.