ஐபிஎல் 2023 : புதிய ஜெர்சியுடன் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி..!! மாற்றம் தருமா..?? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!!

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தொடருக்காக தயாராகி வருகிறார்கள்.இந்த ஐபிஎல் தொடரில் புதிய பொலிவுடன் களமிறங்கும் வகையில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி தங்கள் அணியின் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி, முதல் தொடரிலேயே அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்று வரை சென்றது. லக்னோ அணியை சிறப்பாக வழி நடத்திய பெருமை கேப்டன் கே.எல்.ராகுலை தான் சேரும் என்று கூறினால் மிகையில்லை.
இந்த 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், நேற்று லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நிர்வாகம் சார்பில் தங்கள் அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுல், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட முக்கிய நபர்கள் பங்கேற்றார்கள்.
இந்த 2023 ஆண்டு நடைபெற உள்ள தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி டார்க் ப்ளூ நிறத்துடன் சிவப்பு நிற கோடுகள் உள்ள புதிய ஜெர்சி உடன், போட்டிகளில் பங்கேற்க உள்ளார்கள். இந்த ஆண்டு கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்கும் லக்னோ அணிக்கு புதிய ஜெர்சி அதிர்ஷ்டம் வாய்ந்ததாக (லக்காக ) அமையுமா..?? என்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி சாம்பியன் பெரும் வகையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சிறு தவறுகளை சரி செய்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது, மேலும் லக்னோ அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர், பவுலிங் பயிற்சியாளர் ஆண்டி பிச்செல் மற்றும் துணை பயிற்சியாளர்கள் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி : கே எல் ராகுல்(கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் சர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்பா கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், ஜெய்தேவ் பூரன், நிக்கோலஸ் பூரன் உனத்கட், யாஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்பர்ட், டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, பிரேக் மன்கட், ஸ்வப்னில் சிங், நவீன் உல் ஹக், யுத்வீர் சரக்.