ஐபிஎல் 2023 தொடருக்கான லக்னோ அணியின் மாஸ் பிளேயிங் லெவன் குறித்த அப்டேட்..!! | lsg playing 11 ipl 2023

ஐபிஎல் தொடரில் 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகி கே.எல்.ராகுல் தலைமையில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, முதல் முறை ஐபிஎல் தொடர் பங்கேற்பில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணியின் 2023 ஆம் தொடருக்கான பிளேயிங் லெவன் குறித்து காண்போம்.
உலகளவில் பல ரசிகர்களை கொண்டுள்ள முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் பங்கேற்க உள்ள லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்று வரை சென்று தவறவிட்ட சாம்பியன் பட்டத்தை இந்த முறை முழுவீச்சில் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சிறந்த முன்னணி வீரர்கள் அடங்கிய பிளேயிங் லெவன் உடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் லக்னோ அணியின் துவக்க வீரர் குயின்டன் டி காக் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு பிறகு தான் அணியில் இடம் பெறுவார் என்பதால் முதல் சில போட்டிகளில் பங்கேற்க துவக்க வீரர் இடத்தில் கே எல் ராகுல் உடன் தீபக் ஹூடா அல்லது கையில் மேயர்ஸ் களமிறங்க வாய்ப்புள்ளது, அடுத்து அணியின் மிடில் ஆர்டரை வலு சேர்க்கும் வகையில் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஏலத்தில் வாங்கப்பட்ட நிக்கோலஸ் பூரான் இடம்பெற்றுள்ளனர்.
லக்னோ அணியின் பவுலர்கள் பிரிவில் வேகத்தில் மிரட்ட அவேஷ் கான்,மார்க் வூட் மற்றும் ஜெயதேவ் உனட்கட் இடம் பெற்றுள்ளார்கள் ,மேலும் ஸ்பின்னர்கள் பிரிவில் க்ருணால் பாண்டியா மற்றும் ரவி பிஷ்னோய் இடம்பெற்று அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2023 தொடரில் மற்ற அணியை ஒப்பிடும் பொழுது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி மிகவும் பலம் வாய்ந்த பிளேயிங் லெவன் கொண்டுள்ள அணியாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 1ஆம் தேதி டெல்லி கேப்பிடல் அணியோடு லக்னோவில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் சிறந்த பிளேயிங் லெவன் : குயின்டன் டி காக்/கைல் மேயர்ஸ், கே எல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், மார்க் வூட், மொஹ்சின் கான்/ஜெய்தேவ் உனத்கட்.