லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மாஸ் வெற்றி..!! மார்க் வுட் வேகத்தில் டெல்லி திணறல்.!! | lucknow vs delhi in ipl 2023

ஐபிஎல் 2023 ஆம் தொடரின் 3 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் அதிரடி ஆட்டம் அரங்கேறியது.லக்னோ அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசதி டெல்லி அணியை துவம்சம் செய்தது.
டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர்கள் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி டெல்லி பவுலர்களை துவம்சம் செய்தார்கள். இந்த போட்டியில் லக்னோ அணி சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய கைல் மேயர்ஸ் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.
லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 193 ரன்கள் பதிவு செய்ய கைல் மேயர்ஸ் பதிவு செய்த 73 (38) ரன்கள் முக்கியமானதாக இருந்தது, அதே சமயத்தில் டெல்லி அணி சார்பில் சேத்தன் சர்க்காரியா மற்றும் கலீல் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள் அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி முன்னணி வீரர்கள் பிரிதிவ் ஷா 12(9) , மிட்செல் மார்ஷ் 0(1) மற்றும் சர்பராஸ் கான் 4(9) ஆகியோர் உடனுக்குடன் லக்னோ பவுலர் மார்க் வுட் பவுலிங்கில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் புதிய பேட்ஸ்மேன் ரிலீ ரோசோவ் கேப்டன் டேவிட் வார்னர் உடன் ஜோடி சேர்ந்து மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் நிலையை சற்று சரி செய்த வேளையில் 30(20) ரன்கள் பெற்று ரவி பிஷ்னோய் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார் டெல்லி அணியின் காப்பானாக இறுதி வரை பேட்டிங் செய்த டேவிட் வார்னர் 56(48) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். லக்னோ பவுலர் மார்க் வுட் 5 விக்கெட்டுகள் பெற்று டெல்லி அணிக்கு முடிவு காட்டினார்.
அதன்பின் களமிறங்கிய டெல்லி வீரர்கள் முயன்றும் ரன்கள் பெற முடியாததால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி வெறும் 143 ரன்கள் மட்டுமே பதிவு செய்தது, இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.கே எல் ராகுல் தலைமையில் களமிறங்கிய லக்னோ அணி ஐபிஎல் அரங்கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.