ஹைதெராபாத் அணியை அசால்டாக வீழ்த்திய லக்னோ மேட்ச் வேற லெவல் | SRH vs LSG IPL 2023 Match Highlights

ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று மதியம் ஐபிஎல் 2023 தொடரின் 58வது லீக் போட்டியானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர்.
ஹைதெராபாத் அணியின் வீரர்கள் அன்மோல்ப்ரீத் சிங் (36), அபிஷேக் சர்மா (7), ராகுல் திரிபாதி (20), ஐடன் மார்க்ரம் (18), ஹென்ரிச் கிளாசென் (47), கிளென் பிலிப்ஸ் (0) என்று தங்களால் முடிந்த ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியின் இறுதியில் அப்துல் ஷாமத் (37) மற்றும் புவனேஷ்வர் குமார் (2) மட்டும் அவுட் ஆகாமல் இருந்தனர். என்ன தான் ஹைதெராபாத் அணி சிறுப்பாக விளையாடினாலும் லக்னோ அணியின் பந்து வீச்சாளர்கள் க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகளும் மற்றும் யுத்வீர் சிங், அவேஷ் கான், யாஷ் தாக்கூர், அமித் மிஷ்ரா ஆகியோர் 1 விக்கெட்டுகளும் எடுத்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி வெறித்தனமாக விளையாடி அசத்தினர். லக்னோவின் தொடக்க வீரர்கள் கைல் மேயர்ஸ் (2), குயின்டன் டி காக் (29), மார்கஸ் ஸ்டோனிஸ் (40) ஹைதராபாத்தின் பந்து வீச்சில் சிக்கி ஆட்டமிழந்தனர். இருப்பினும் போட்டி முடியும் வரையில் பிரேரக் மன்கட் (64) மற்றும் நிக்கோலஸ் பூரன் (44) ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடினார்கள். போட்டியின் முடிவில் 4 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் லக்னோ அணி 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.