இறுதி வரை உச்சக்கட்ட போராட்டம்...லக்னோ நூலிழையில் வெற்றி | LSG vs KKR IPL 2023 Match Highlights

மே 20 ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஐபிஎல் 2023 தொடரின் 68வது லீக் போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங்:
முதலில் களமிறங்கிய லக்னோ வீரர்கள் கரன் ஷர்மா (3), குயின்டன் டி காக் (28), பிரேரக் மான்கண்ட் (26), மார்கஸ் ஸ்டோனிஸ் (0), க்ருனல் பாண்டியா (9), ஆயுஷ் படோனி (25), நிக்கோலஸ் பூரன் (58) மற்றும் ரவி பிஷ்னோய் (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் கிருஷ்ணப்பா கவுதம் (11) மற்றும் நவீன்-உல்-ஹக் (2) அவுட் ஆகாமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தனர். வைபவ் அரோரா (2), ஷர்துல் தாக்கூர் (2), சுனில் நரேன் (2), ஹர்ஷித் ராணா (1) மற்றும் வருண் சக்ரவர்த்தி (1) விக்கெட் எடுத்துள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்:
அடுத்து களத்தில் இறங்கிய கொல்கத்தா வீரர்கள் ஜேசன் ராய் (45), வெங்கடேஷ் ஐயர் (24), நிதிஷ் ராணா (8), ரஹ்மானுல்லா குர்பாஸ் (10), ஆண்ட்ரே ரஸ்ஸல் (7), ஷர்துல் தாகூர் (3) மற்றும் சுனில் நரைன் (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ரிங்கு சிங் (67) மற்றும் வைபவ் அரோரா (1) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தனர். லக்னோ அணியின் பந்து வீச்சாளர்கள் யாஷ் தாகூர் (2), ரவி பிஷ்னோய் (2), கிருஷ்ணப்பா கவுதம் (1) மற்றும் க்ருணால் பாண்டியா (1) விக்கெட் எடுத்தனர். இந்த போட்டியில் லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.