லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான போட்டியின் முழு விவரங்கள்..!! | lsg vs srh 2023 prediction

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் அடுத்த லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள், இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், ட்ரீம் லெவன் கணிப்பு, பிட்ச் அறிக்கை உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
இதுவரை 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள், மேலும் அணியின் முன்னணி வீரர் குயின்டன் டி காக் முதல் 2 போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் அவர் இடத்தில் களமிறங்கிய லக்னோ அணியின் புதிய வீரர் கைல் மேயர்ஸ் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அதே சமயத்தில் தற்போது குயின்டன் டி காக் அணியில் இணைந்து உள்ள நிலையில் லக்னோ அணி அதிரடி பேட்டிங் கொண்ட அணியாக உள்ளது, மேலும் சிறந்த பவுலிங் யூனிட்டை வைத்துள்ள அணியாகவும் உள்ளது எனவே லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் ஐடன் மார்க்ராம் முதல் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலையில், முன்னணி வீரர் புவனேஷ்வர் குமார் அணியை வழிநடத்தினார். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி மிகவும் மோசமான தோல்வியை தழுவியது, எனவே லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் கேப்டன் ஐடன் மார்க்ராம் பங்கேற்க உள்ள நிலையில் தவறுகளை சரி செய்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
போட்டி குறித்த விவரம் :
10 வது லீக் போட்டி : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
நேரம் & நாள் : 7:30 p.m & வெள்ளிக்கிழமை
தேதி : 7 ஏப்ரல் 2023
மைதானம் : பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானம், லக்னோ.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள லக்னோ மைதானத்தில் உள்ள பிட்ச் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்த உதவும், குறிப்பாக போட்டியின் தொடக்கத்தில் பிட்ச் ஸ்விங் ஆகும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லக்னோ மற்றும் ஹைதெராபாத் மோதும் போட்டியில் அதிரடி ஆட்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிய வந்துள்ளது.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த கே எல் ராகுல் தலைமையில் ஆன லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி, அடுத்து சென்னை அணியுடன் விளையாடிய போட்டியில் இறுதி வரை போராடி தோல்வியை தழுவியது. இந்நிலையில் தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் விளையாட உள்ள போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
அதே சமயத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை 2023 ஆம் தொடரின் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது, எனவே புதிய கேப்டன் ஐடன் மார்க்ராம் தலைமையில் களமிறங்க உள்ள ஹைதராபாத் கட்டாயம் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - ஐடன் மார்க்ராம்
துணை கேப்டன் - கைல் மேயர்ஸ்
விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக்
பேட்ஸ்மேன் – கே எல் ராகுல், ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன்
ஆல்ரவுண்டர்கள் - வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா
பந்துவீச்சாளர்கள் - ரவி பிஷ்னோய், மார்க் வூட், மார்கோ ஜான்சன்
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் பிளேயிங் லெவன்(தோராயமான ) : குயின்டன் டி காக், கைல் மேயர்ஸ், கே எல் ராகுல்(கேப்டன்), நிக்கோலஸ் பூரன்(வி.கீ ), தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்பா கவுதம், யாஷ் தாக்கூர், மார்க் வூட், ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்(தோராயமான ) : அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ராம்(கேப்டன்), ஹாரி புரூக், ஹென்ரிச் கிளாசென்(வி.கீ), வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், மார்கோ ஜான்சன்.