அசால்ட்டாக தட்டி தூக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.! எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் தெரியுமா.?| LSG vs RR IPL 2023

இந்திய மண்ணில் விமர்சையாக நடைபெற்று வரக்கூடிய ஐபிஎல் 2023 தொடரில், இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியில் இருந்து கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் களமிறங்கினர். முதலில் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்த பார்ட்னர்ஷிப் 10 ஓவர் வரை அவுட் ஆகாமல், 79 ரன்களைக் குவித்தனர்.
இவ்வாறு லக்னோ அணி பேட்டிங் ஆடியதில் ராஜஸ்தான் அணிக்கு 155 ரன்களை இலக்கு வைத்தது.
அடுத்து ராஜஸ்தான் அணியிலிருந்து, முதலில் களமிறங்கியவர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 11 ஓவர் வரை சென்று, எந்த விக்கெட்டும் எடுக்காமல் 81 ரன்களைக் குவித்தனர். ஆனால் அடுத்த ஓவரில் 38 ரன்களுடன் ஆட்டமிழந்தார் ஜெய்ஸ்வால். பிறகு சஞ்சு சாம்சன் களமிறங்கி இரண்டே ரன்களுடன் ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.
அதன் பிறகு கடைசி ஓவரில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரியான் பாரக் பார்ட்னர்ஷிப்பில், 20 ஓவரில் 144 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றனர்.