ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லக்னோ அணி எடுத்த ரன் இது தான்.! | LSG vs RR 2023

இந்திய மண்ணில் விமர்சையாக நடைபெற்று வரக்கூடிய ஐபிஎல் 2023 தொடரில், இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியில் இருந்து கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் களமிறங்கினர். முதலில் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்த பார்ட்னர்ஷிப் 10 ஓவர் வரை அவுட் ஆகாமல், 79 ரன்களைக் குவித்தனர்.
பின், பட்லரின் அதிரடி பவுலிங்கால் ராகுல் அவு செய்யப்பட்டு, ஆயுஷ் பதோனி களமிறங்கினார். ஆனால், இவர் எந்த ரன்களும் எடுக்காமல் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். இவருக்குப் பதில் தீபக் ஹூடா களமிறங்கினார். ஆனால், அடுத்த ஆட்டத்தில் இவர்கள் இருவரும் அவுட் செய்யப்பட்டு நிக்கோலஸ் மற்றும் மார்கஸ் களமிறங்கினர். முதல் 10 ஓவரில் 76 ரன்களைக் குவித்த நிலையில், அடுத்த 5 ஓவரில் இதற்கு பாதி ரன்கள் கூட அடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதன் பிறகு, இந்த பார்ட்னர்ஷிப் 19 ஆவது ஓவருக்கு 146 ரன்களைக் கொண்டிருந்தது. கடைசி ஓவரில் மார்கஸ் மற்றும் நிக்கோலஸ் இருவரும் அவுட் செய்யப்பட்டனர். பிறகு, கடைசி ஓவரில் யுத்விர் சிங் மற்றும் க்ருணல் பாண்டியா தலைமையில் ஆட்டம் முடிக்கப்பட்டு, இறுதியில் 154 ரன்கள் குவிக்கப்பட்டது.
அதன் படி, லக்னோ அணி ராஜஸ்தான் அணிக்கு 155 ரன்களை இலக்கு வைத்துள்ளது. ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டம் என்னவாக இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.