லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டியின் கணிப்புகள் அடங்கிய முழு அப்டேட்..!! | lsg vs pbks ipl 2023 preview

ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளார்கள். இந்த முக்கிய போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
ஐபிஎல் அரங்கில் தற்போது அனைத்து அணிகளும் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முன்னேற்றம் அடையும் நோக்கில் அதிரடியாக விளையாடி வருவதால், இந்த போட்டியிலும் அதிரடி ஆட்டத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
லக்னோ அணியை பொறுத்தவரை கே எல் ராகுல் தலைமையில் சிறப்பாக விளையாடி பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது, அதே சமயத்தில் பஞ்சாப் அணியும் கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் பங்கேற்ற 4 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது என்பதால் இரு அணிகள் சார்பில் இந்த போட்டியில் வெற்றி பெற மிரட்டல் ஆட்டம் வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.
போட்டி குறித்த விவரம் :
21 வது லீக் போட்டி : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & சனிக்கிழமை
தேதி : 15 ஏப்ரல் 2023
மைதானம் : பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானம், லக்னோ.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள லக்னோ பிட்ச் ஆனது மிகவும் ஸ்லோவாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது, எனவே ஸ்பின்னர்கள் சிறப்பாக பவுலிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற முதலில் பேட்டிங் செய்யும் அணி 150 ரன்களுக்கு மேல் பதிவு செய்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - ஷிகர் தவான்
துணை கேப்டன் - ரவி பிஷ்னோய்
விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன்
பேட்ஸ்மேன்கள் – கே எல் ராகுல், கைல் மேயர்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன்
ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோனிஸ், சாம் குரான்
பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், அமித் மிஸ்ரா.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2032 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அசத்தல் வெற்றிகளை பெற்று மிரட்டல் அணியாக நல்ல பார்மல் உள்ளது. மேலும் இந்த தொடரில் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய லக்னோ அணி அதன்பின் தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டும் தான் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் இறுதியில் தோல்வியை தழுவி உள்ளது, குறிப்பாக 2 வெற்றிகளை தொடரில் பதிவு செய்துள்ளது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை மீண்டும் தொடர முழுவீச்சில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளை பார்க்கும் பொழுது தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளை பெற்று அதிரடியான அணியாக விளங்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இந்த போட்டியில் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : கே எல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் (வி.கீ), மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ஜெய்தேவ் உனத்கட், அவேஷ் கான், அமித் மிஸ்ரா, மார்க் வூட், ஜெய்தேவ் உனத்கட்.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (வி.கீ), ஷாருக் கான், சாம் குர்ரான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ந்தான் எல்லிஸ், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.