மாஸ் பதிலடி கொடுத்த பஞ்சாப் அணி.. படு தோல்வியில் லக்னோ..! | PBKS vs LSG IPL 2023

ஐபிஎல் 2023 போட்டியில், 21 ஆவது போட்டியாக இன்று லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது லக்னோவில் பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியின் முக்கிய அப்டேட்டே, லக்னோவில் இருந்து ஷிகர் தவான் விளையாடவில்லை. அதற்குப் பதிலாக, சாம் குர்ரான், இந்தப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியுள்ளார்.
மேலும், இதில் முதலில் ஆட்டத்தை மெதுவாகத் தொடங்கிய லக்னோ அணி, கே.எல்.ராகுல் அசத்தல் ரன்களை அடித்தார். அதன் படி, கேஎல்ராகுல் 53 பந்துகளில், 68 ரன்களை அடித்தார்.
இறுதியாக, லக்னோ அணி 20 ஓவரில் 159 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளுடன் ஆட்டமிழந்தது. லக்னோ அணியை வெல்ல, பஞ்சாப் அணி அதற்கான பதிலடியைக் கொடுக்கும் விதமாக ஆடினர்.
பஞ்சாப் அணியும் முதலில் ஆட்டத்தை மெதுவாகத் தொடங்கியது, இந்த ஆட்டத்தில் அதிக ரன்களை, 39 பந்துகளில் 57 ரன்களை விலாசியவர் சிகாண்டர். இறுதியில், ஷாருக்கான் 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து, 19.3 ஓவரிலேயே லக்னோ வீழ்த்தப்பட்டது. இன்றைய போட்டியில், பஞ்சாப் அணி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியைத் தழுவியது.