ஸ்டோய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் வென்ற லக்னோ அணி..! போராடித் தோற்ற மும்பை இந்தியன்ஸ்..! | LSG vs MI IPL 2023

இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் 63 ஆவது போட்டியாக லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியானது லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி மே 16, 2023 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 07.30 மணி அளவில் நடந்தது.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இஷான் கிஷான் 39 பந்துகளுக்கு 59 ரன்கள் எடுத்தார். மேலும், ரோஹித் சர்மா 25 பந்துகளுக்கு 37 ரன்களும், நேஹால் வாதிரா 20 பந்துகளுக்கு 16 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து, டிம் டேவிட் 19 பந்துகளுக்கு 32 ரன்கள் எடுத்து அசாத்தியமாக ஆடினார். சூர்யகுமார் யாதவ் 9 பந்துகளுக்கு 7 ரன்கள் அடித்திருந்தார். இவ்வாறு, மொத்தமாக 20 ஓவரில் 172 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளுடன் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணியானது களமிறங்கியது. இதில், தீபக் ஹூடா 7 பந்துகளுக்கு 5 ரன்கள் அடித்திருந்தார். டி காக்15 பந்துகளுக்கு 16 ரன்கள் எடுத்தார். இதில், ப்ரேரக் மேன்காட் 1 பந்து மட்டுமே அடித்து ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து, க்ருணல் பாண்டியா 42 ரன்களுக்கு 49 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், அடுத்து ஸ்டோயின்ஸின் அதிரடி ஆட்டத்தால் 47 பந்துகளுக்கு 89 ரன்கள் எடுத்து சூப்பரான ஆட்டத்தை ஆடினார். பூரன் 8 பந்துகளுக்கு 8 ரன்கள் எடுத்திருந்தார். அதன் படி, 20 ஓவரில் 177 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளுடன் அதிரடியாக வெற்றி பெற்றனர்.