பிளே ஆஃப்-ஐத் தவர விட்ட லக்னோ அணி.! மும்பை அணியின் ஸ்கோர் என்னவாக இருக்கும்.? | LSG vs MI IPL 2023

இந்திய மண்ணில் 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஐபிஎல் அட்டவணைப் படி, போட்டிகள் முடிந்து, ஸ்கோர் பட்டியலில் அதிக ஸ்கோர்களைப் பெற்ற அணிகளுக்கு பிளே ஆஃப் சுற்று நடைபெற்று வருகிறது. இதில், கடந்த மே 23, 2023 அன்று சென்னை சிதம்பரம் மைதானத்தில் குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில், அதிரடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று, ரசிகர்களுக்கு பேரின்பத்தைத் தந்தது.
இதனைத் தொடர்ந்து, நேற்று அதாவது மே 24, 2023 ஆம் நாள் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணிகளுக்கு இடையே பிளே ஆஃப் சுற்று நடைபெற்றது. இந்தப் போட்டியானது சென்னையில் உள்ள MA சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்த போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இஷான் கிஷான் மற்றும் ரோஹித் களமிறங்கினர். இதில், இஷான் கிஷான் 12 பந்துகளுக்கு 15 ரன்களும், ரோஹித் 10 பந்துகளுக்கு 11 ரன்களும் எடுத்தனர். மேலும் கிரீன் தனது அதிரடி ஆட்டத்தால் 23பந்துகளுக்கு 41 ரன்கள் எடுத்திருந்தார். சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளுக்கு 33 ரன்கள் மற்றும் திலக் வர்மா 22 பந்துகளுக்கு 26 ரன்களும் அடித்திருந்தனர். மேலும், டிம் டேவிட் 13 பந்துகளுக்கு 13 ரன்கள் அடித்தார். நேஹால் வாதிரா 12 பந்துகளுக்கு 23 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து, கிரிஸ் 7 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்தார். கடைசியாக 20 ஓவரில் 8 விக்கெட்டுகளுடன் 182 ரன்களை எடுத்தது மும்பை அணி. இதனைத் தொடர்ந்து, 183 ரன்களை லக்னோ அணிக்கு இலக்காக வைத்தது.
போட்டியில் அடுத்தபடியாக லக்னோ அணியில் இரண்டு வீரர்கள் கைல் மேயர்ஸ், ப்ரேராக் மான்காட் இருவரும் கலந்து கொண்டனர். கைல் 13 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுத்தார். மான்காட் 6 பந்துகளுக்கு 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மேலும், இதில் அதிகபட்ச ரன்களாக மார்கஸ் ஸ்டோயினிஸ் 27 பந்துகளுக்கு 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால், லக்னோ அணியில் தொடர்ந்து விக்கெட்டுகள் பறிபோயின. அதனால், 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களுடன் தோல்வியைத் தழுவியது. இவ்வாறு மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றது.