லக்னோ மற்றும் குஜராத் அணிகள் இடையிலான மிரட்டல் போட்டி குறித்த முக்கிய விவரங்கள்…!! ஒரு பார்வை..!! | lsg vs gt 2023 preview

இந்தியாவின் முக்கிய டி20 தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிகவும் மிரட்டலாக நடைபெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் அடுத்த அதிரடியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளார்கள். இந்த மிரட்டல் போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு, ட்ரீம் லெவன் டீம் கணிப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை காண்போம்.
ஐபிஎல் 2023 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி பங்கேற்ற 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று மிரட்டல் பார்மில் உள்ள அணியாக உள்ளது. அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பங்கேற்ற 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தல் அணியாக நடப்பு தொடரில் வலம் வருகிறது. இந்நிலையில் லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள போட்டியில் அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி குறித்த விவரம் :
30 வது லீக் போட்டி : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & சனிக்கிழமைதேதி : 22 ஏப்ரல் 2023
மைதானம் : பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானம், லக்னோ.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள லக்னோ மைதானத்தில் உள்ள பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருக்கும், என்பதால் பேட்ஸ்மேன்கள் சற்று ரன்கள் பெற மிகவும் தடுமாறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.இந்த மைதானத்தில் சராசரி இலக்காக 150 ரன்கள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - கே எல் ராகுல்
துணை கேப்டன் - ரஷித் கான்
விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன்
பேட்ஸ்மேன்கள் - கைல் மேயர்ஸ், ஷுப்மான் கில், டேவிட் மில்லர்
ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோனிஸ், ஹர்திக் பாண்டியா
பந்துவீச்சாளர்கள் - ரவி பிஷ்னோய், அல்சாரி ஜோசப், அமித் மிஸ்ரா.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 தொடரில் மிரட்டல் வீரர் கே எல் ராகுல் தலைமையில் களமிறங்கி அசத்தி வரும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதே போல் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் அதிரடியாக விளையாடி வருகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையில் இந்த போட்டியில் வெற்றி பெற கடுமையான போராட்டம் நடைபெறும் என்று கூறினால் மிகையில்லை. அதே சமயத்தில் இந்த போட்டி நடைபெறும் மைதானம் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஹோம் கிரவுண்ட் ஆகும் என்பதால் வெற்றி வாய்ப்பு கே எல் ராகுல் தலைமையில் லக்னோ அணிக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : கைல் மேயர்ஸ், கே எல் ராகுல்(கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, யுத்வீர் சிங், நவீன் உல் ஹக், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா.
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : விருத்திமான் சாஹா(வி.கீ), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ராகுல் டெவாடியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், மோகித் சர்மா, ஷமி, நூர் அகமது.