குஜராத் அணியின் அதிரடி வெற்றி..! கடும் முயற்சியிலும் தோல்வியில் லக்னோ..

இந்திய மண்ணில் விமர்சையாக நடைபெற்று வரக்கூடிய ஐபிஎல் 2023 தொடரில், இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன் படி, லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் அணியிலிருந்து சஹா மற்றும் கில் இருவரும் முதலில் ஆட்டத்தை ஸ்டார்ட் செய்தார். ஆனால், கில் பூஜ்ஜிய ரன்களுடன் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா ஆட்டத்தைத் தொடர, அதிரடியான ஆட்டமாக இருந்தது.
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 20 ஓவரில் 135 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகளுடன் காணப்பட்டது.
லக்னோ அணி பேட்டிங்க் செய்ததில், முதலில் கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் வீரர்கள் களமிறங்கினர். கே. எல் ராகுல் 59 பந்துகளுக்கு 66 ரன்கள் எடுத்து அதிரடியான ஆட்டத்தை ஆடினார். இதனைத் தொடர்ந்து, ஆடிய அதிரடியான ஆட்டத்தில் லக்னோ அணி 128 ரன்களுடன் 7 விக்கெட்டுகளைப் பெற்று 20 ஓவரில் முடித்தனர். இதனால், குஜராத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.