லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த விவரங்கள்..!!

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் கே.எல்.ராகுல் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டேவிட் வார்னர் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டிக்கான பிளையிங் 11, பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்புகள் உள்ளிட்டவை குறித்து காண்போம்.
இந்தியாவின் முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிகவும் சிறப்பாக ஆரம்பித்து போட்டிகள் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரின் 3 வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் தங்கள் முதல் வெற்றியை நோக்கி களமிறங்க உள்ளார்கள்.
போட்டி குறித்த விவரம் :
3 வது லீக் போட்டி : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
நேரம் & நாள் : 7:30 p.m & சனிக்கிழமை.
தேதி : 1 ஏப்ரல் 2023
மைதானம் : பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், லக்னோ.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
பிட்ச் அறிக்கை :
ஐபிஎல் தொடரின் 3 வது லீக் போட்டி நடைபெற உள்ள லக்னோ மைதானத்தில் உள்ள பிட்ச் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்த உதவும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் அதே சமயத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி அதிக ரன்கள் குவிக்கும் என்று தெரிய வந்துள்ளது.இந்த பிட்சில் சராசரி ஸ்கோர் 151 என்று பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி கணிப்பு :
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் 3 வது லீக் போட்டியில் கே.எல். ராகுல் தலைமையில் களமிறங்க உள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து அசத்தியது. அதே போல் இந்த ஆண்டும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.லக்னோ அணியும் ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்க முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியை பொறுத்தவரை புதிய கேப்டன் டேவிட் வார்னர் உடன் களமிறங்க உள்ளது, எனவே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் புதிய கேப்டன் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் போட்டியில் வெற்றி பெற முழுவீச்சில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இரு அணிக்கும் இந்த போட்டியில் வெற்றிக்கான வாய்ப்பு சம அளவில் உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
ட்ரீம் லெவன் அணி கணிப்பு :
கேப்டன் : கே.எல். ராகுல்
துணை கேப்டன் : டேவிட் வார்னர்
விக்கெட் கீப்பர் : நிக்கோலஸ் பூரன்
பேட்ஸ்மேன்கள் :தீபக் ஹூடா, பிரித்வி ஷா
ஆல்ரவுண்டர்கள் : மிட்செல் மார்ஷ்,
பவுலர்கள் : அவேஷ் கான், ரவி பிஷ்னோய், சேத்தன் சகாரியா, கலீல் அகமது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளையிங் லெவன் (தோராயமான): கே.எல். ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் (வி.கீ), க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, ஜெய்தேவ் உனத்கட், மார்க் வூட், அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : டேவிட் வார்னர் (கேப்டன் ), பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிலீ ரஸ்ஸௌ சர்ஃபராஸ் கான் (வி.கீ), ரோவ்மேன் பவல், அக்சர் படேல், கமலேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது.