லக்னோ மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்..!! | lsg vs csk ipl 2023 toss update

இந்தியாவின் முக்கிய டி20 தொடராக விளங்கும் ஐபிஎல் 2023 தொடர் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் போன்ற முக்கிய விவரங்கள் வெளியானது.
ஐபிஎல் அரங்கில் கேப்டன் கே எல் ராகுல் தலைமையில் ஆன லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது. அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி தலைமையில் 5 போட்டிகளில் வெற்றி 4வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் அடையும் வகையில் வெற்றி பெற இரு அணிகள் முழு வீச்சில் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஐபிஎல் அரங்கில் இரு அணிகளும் 2 போட்டிகளில் விளையாடி தலா 1 வெற்றிகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த போட்டியில் லக்னோ அணி கேப்டன் கே எல் ராகுல் காயம் காரணமாக விலகிய நிலையில், அணியை வழிநடத்த முன்னணி வீரர் க்ருனால் பாண்டியா களமிறங்கி உள்ளார். மேலும் மழை காரணமாக சிறிது நேரம் தாமதமாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம் எஸ் தோனி பௌலிங் செய்ய முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன் : கைல் மேயர்ஸ், மனன் வோஹ்ரா, கரண் ஷர்மா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன்(வி.கீ), க்ருனால் பாண்டியா(கேப்டன்), கிருஷ்ணப்பா கவுதம், நவீன்-உல்-ஹக், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி(கேப்டன்/ வி.கீ), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.