ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் திடீர் மாற்றம்..!! | lsg vs csk ipl 2023 match rescheduled

ஐபிஎல் 2023 அரங்கில் போட்டிகள் மிரட்டலாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருந்த போட்டியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மண்ணில் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, இந்த தொடரில் மே 4ஆம் தேதி மதியம் 3:30 மணிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. தற்போது இந்த போட்டியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது லக்னோவில் மே 4ஆம் தேதி நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது, இந்நிலையில் லக்னோ மற்றும் சென்னை அணிகளுக்கு இடையில் நடைபெற இருந்த போட்டியானது முன்னதாக மே 3ஆம் தேதி 3:30 மணிக்கு நடைபெறும் வகையில் மாற்றி அமைக்க பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2023 அரங்கில் முன்னதாக சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில், கே எல் ராகுல் தலைமையில் ஆன லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடப்பு தொடரில் தற்போதைய நிலையில் லக்னோ மற்றும் சென்னை அணிகள் விளையாடிய 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 2 மற்றும் 3 வது இடங்களில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.