லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி குறித்த முழு விவரங்கள்..!! | lsg vs csk 2023 ipl preview

ஐபிஎல் 2023 தொடரில் லீக் போட்டிகள் மிகவும் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் அடுத்த போட்டியில் தொடரின் மிரட்டல் அணிகளான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி கொள்ள உள்ளார்கள். இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு மற்றும் ட்ரீம் லெவன் டீம் கணிப்பு உள்ளிட்ட விவரங்களை பற்றி காண்போம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு தொடரில் 9 போட்டிகளில் 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் நல்ல நிலையில் தான் உள்ளது. அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 9 போட்டிகளில் 5 வெற்றிகள் பெற்று 10 புள்ளிகளுடன் தொடரில் லக்னோ அணியை போல் தான் சிறந்த பார்மில் தான் உள்ளது.
அதே சமயத்தில் இரு அணிகளும் கடைசியாக தொடரில் விளையாடிய போட்டிகளில் தோல்விகளை பெற்று உள்ள நிலையில் கட்டாய வெற்றியை நோக்கி இந்த போட்டியில் களமிறங்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி குறித்த விவரம் :
45 வது லீக் போட்டி : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
நேரம் & நாள் : 3:30 p.m & புதன்கிழமை
தேதி : 3 மே 2023
மைதானம் : பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானம், லக்னோ.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & ஜியோ சினிமா.
பிட்ச் அறிக்கை :
இந்த போட்டி நடைபெற உள்ள பிட்சில் தான் பேட்ஸ்மேன்கள் ரன்கள் பெற மிகவும் தடுமாறி இருக்கிறார்கள், குறிப்பாக ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்து பவுலர்கள் சிறந்த பவுலிங்கை இங்கு வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிட்சில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 150 ரன்களுக்கு மேல் பதிவு செய்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
ட்ரீம் லெவன் டீம் கணிப்பு :
கேப்டன் - டெவோன் கான்வே
துணை கேப்டன் - கைல் மேயர்ஸ்
விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன்
பேட்ஸ்மேன்கள் - ஆயுஷ் படோனி, அஜிங்கிய ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட்.
ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, மார்கஸ் ஸ்டோனிஸ்
பந்துவீச்சாளர்கள் - ரவி பிஷ்னோய், மதீஷ பத்திரன, மகேஷ் தீக்ஷன.
வெற்றி கணிப்பு :
கே எல் ராகுல் தலைமையில் கடந்த விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக மோதிய போட்டியில் இறுதிவரை போராடி தோல்வியை தழுவியது. அதேபோல் எம் எஸ் தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடிய போட்டியில் கடைசி பந்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று கடந்த போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து வெளியேறும் வகையில் இரு அணிகள் சார்பில் அதிரடி ஆட்டம் அரங்கேறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது, எனவே இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கு சம அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ஆயுஷ் படோனி, கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கௌதம், நவீன் உல் ஹக், அமித் மிஸ்ரா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, அஜிங்கிய ரஹானே, அம்பதி ராயுடு, எம் எஸ் தோனி(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, மகேஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்.