லக்னோ கேப்டன் கே எல் ராகுல் பங்கேற்பாரா ..?? சென்னை அணியில் ஏற்பட உள்ள மாற்றங்கள்..?? | lsg vs csk 2023 match update

ஐபிஎல் 2023 தொடரில் அடுத்த லீக் போட்டியில் மிரட்டல் அணிகளான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளார்கள். இந்த போட்டியில் லக்னோ அணி கேப்டன் கே எல் ராகுல் விளையாடுவரா..?? அல்லது புதிய கேப்டன் தலைமையில் அணி களமிறங்குமா..?? மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்பட உள்ள புதிய மாற்றங்கள் என பல தகவல்கள் பற்றி காண்போம்.
இதற்கு முன் ஐபிஎல் 2023 அரங்கில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் கேப்டன் தோனி தலைமையில் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டியில் வெற்றி பெற இரு அணிகள் சார்பில் மிரட்டல் ஆட்டம் அரங்கேறும் என்று கூறினால் மிகையில்லை.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கே எல் ராகுல் கடந்த போட்டியில் காயமடைந்த நிலையில், இன்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் லக்னோ அணியை முன்னணி வீரர் க்ருனால் பாண்டியா வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 200 ரன்கள் பதிவு செய்தும் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் இதற்கு முன் நடைபெற்ற போட்டிகளில் குறைந்த இலக்கை தான் அணிகள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்டுள்ள அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கடைசியாக விளையாடிய போட்டியில் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்ள இரு அணிகள் சார்பில் ஒரு அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : குயின்டன் டி காக் (வி.கீ), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா(கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, கிருஷ்ணப்பா கவுதம், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அமித் மிஸ்ரா. தாக்கம் துணை - யாஷ் தாக்கூர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன் (தோராயமான) : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி (கேப்டன் & வி.கீ), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா. தாக்க துணை - ஆகாஷ் சிங்.