பெங்களூர் 200 ரன்கள் அடிச்சும் போதவில்லை..!! கடைசி பந்து வரை சென்ற போட்டி.!! லக்னோ அதிரடி வெற்றி..!!

ஐபிஎல் 2023 தொடரில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டி சின்னசாமி மைதானத்தில் அதிரடியாக நடைபெற்றது, இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் விறுவிறுப்பாக போட்டி கடைசிவரை போட்டி சென்றது. ஐபிஎல் 2023 தொடரில் மறக்க முடியாத ஒரு அசத்தலான போட்டியாக பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டி பதிவானது என்று கூறினால் மிகையில்லை.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு
அணி தொடக்க வீரர்கள் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கை அதிர வைத்தார்கள், குறிப்பாக அணியின் முன்னணி வீரர் விராட் கோலி அதிரடியாக விளையாடி 61 (44) ரன்கள் பதிவு செய்து மிரட்டினார்.அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் மற்றும் கிளென் மாக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர்கள் குவித்தார்கள்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் பதிவு செய்தது, குறிப்பாக கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 79*(46) ரன்கள் பெற்றார். இந்நிலையில் அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி மிரட்டல் ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 0(3) டக் அவுட் ஆனார், பிறகு தொடர்ச்சியாக தீபக் ஹூடா 9(10) , கே எல் ராகுல் 18(20) மற்றும் க்ருனால் பாண்டியா 0(2) ஆகியோர் ஆட்டமிழந்த நிலையில் லக்னோ அணி பரிதவித்தது.
பெங்களூர் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 2 விக்கெட்களையும் வெய்ன் பார்னெல் 2 விக்கெட்களையும் மற்றும் பெற்று அசத்தினார்கள். அதன்பின் லக்னோ அணி சார்பில் முடிந்து போன போட்டிக்கு உயிர் கொடுக்கும் வகையில் களமிறங்கிய லக்னோ அணி ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டு பெங்களூரு பவுலர்களை சிதறடித்தார்.
லக்னோ அணியை வெற்றி நோக்கி திருப்பிய மார்கஸ் ஸ்டோனிஸ் 65(30) ரன்கள் பெற்று ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார், அடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரான் சிக்ஸர் மழை பொழிந்து 15 பந்துகளில் அரைசதம் பதிவு செய்து லக்னோ அணியை வெற்றியின் அருகில் அழைத்து சென்றார் என்று கூறினால் மிகையில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெறுமா என்று அனைவரும் எதிர்பார்த்த நிறத்தில் நம்பிக்கை தரும் விதமாக மிரட்டல் வீரர் நிக்கோலஸ் பூரான் 62(19) விக்கெட்டை சிராஜ் கைப்பற்றினார், அதன்பின் லக்னோ அணியின் அதிரடியை தொடர்ந்த இளம் வீரர் ஆயுஷ் படோனி 30(24) ரன்கள் பெற்ற பொது சிக்ஸர் அடித்து அசத்திய நிலையில் ஹிட் விக்கெட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
அதன்பின் லக்னோ அணியின் வீரர்கள் கடைசிவரை முயன்று போட்டியை இறுதி பந்து வரை எடுத்து சென்றார்கள், ஐபில் 2023 ஆம் தொடரில் முதல் சூப்பர் ஓவர் அரங்கேறும் போட்டியாக இந்த போட்டி பதிவாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் கடைசி பந்தில் ஒரு ரன் பெற்று லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பெற்று அசத்தியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், இறுதி வரை முயன்ற லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி தொடர்ந்து 3 வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.