லக்னோ அதிரடியில் பஞ்சாப் துவம்சம்.ஆனது .!! இமாலய இலக்கை பதிவு செய்து சாதனை .!! | lsg smashed pbks bowlers ipl 2023

ஐபிஎல் அரங்கில் இன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலர்களை துவம்சம் செய்து நாலா பக்கமும் சிதறடித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்ஸ்மேன்கள் இமாலய இலக்கை பதிவு செய்து அரங்கை அதிர வைத்தார்கள் என்று கூறினால் மிகையில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணி துவக்க வீரர் கையில் மேயர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார், குறிப்பாக 20 பந்துகளில் அரைசதம் பதிவு செய்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னணி பவுலர்களை சிதறடித்த லக்னோ அணி வீரர் கையில் மேயர்ஸ் நாலா பக்கமும் சிக்ஸர் மழை பொழிந்த மேயர்ஸ் 4 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரி உட்பட 24 பந்துகளில் 54 ரன்கள் பதிவு செய்து பஞ்சாப் பவுலர் காகிசோ ரபாடா பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இந்த போட்டியில் பவர் பிளே முடிவில் லக்னோ அணி 74 ரன்கள் பதிவு செய்தது, அதே சமயத்தில் பஞ்சாப் அணி சார்பில் முன்னணி பவுலர் ரபாடா லக்னோ அணி துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் மேயர்ஸ் விக்கெட்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் ஜோடி இளம் வீரர் ஆயுஷ் படோனி மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் 10 ஓவர்கள் முடிவில் 128 ரன்கள் பதிவு செய்து அரங்கை அதிர வைத்தார்கள் என்று கூறினால் மிகையில்லை, தொடர் அதிரடி வெளிப்படுத்திய படோனி மற்றும் ஸ்டோனிஸ் பார்ட்னர்ஷிப் க்கு முடிவு கட்டும் வகையில் பஞ்சாப் அணி ஆல்ரவுண்டர் லிவிங்ஸ்டோன் ஆயுஷ் படோனி 43(24) விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டோனிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரான் பஞ்சாப் கிங்ஸ் பவுலர்களை சிதறடித்து தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பில் 95 பந்துகளில் (15.5 ஓவர்களிலேயே ) 200 ரன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ அணி சார்பில் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய ஸ்டோனிஸ் 40 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரி உட்பட 73 ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்தார், இது ஐபிஎல் அரங்கில் ஸ்டோனிஸ் உடைய அதிகபட்ச ரன் ஆக பதிவாகி உள்ளது. அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பூரான் 45(19) ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியை சிதறடித்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 257 ரன்கள் பதிவு செய்தது, இது ஐபிஎல் அரங்கில் ஒரு அணி பதிவு செய்த 2வது அதிகபட்ச இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.