ஐபிஎல் 2023 தொடரில் கைல் மேயர்ஸ் அதிரடியில் லக்னோ அணி டெல்லி அணியை மிரட்டியது..!! | ipl lsg vs dc live

ஐபிஎல் 2023 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோதிய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கைல் மேயர்ஸ் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கை அதிர வைத்தார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணி கேப்டன் கே எல் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கைல் மேயர்ஸ் டெல்லி பவுலர்களை சிதறடித்து அரங்கை அதிர வைத்தார், குறிப்பாக 7 சிக்ஸர் 2 பவுண்டரி உட்பட அரைசதம் கடந்து 73(38) ரன்கள் பதிவு செய்து அசத்தினார்.
இதனை அடுத்து அக்சர் படேல் பவுலிங்கில் கைல் மேயர்ஸ் 73(38) ரன்கள் பதிவு செய்து ஆட்டமிழந்த நிலையில், லக்னோ அணியின் பேட்டிங் சற்று ஆர்டர் சற்று திணறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த லக்னோ வீரர்கள் நிக்கோலஸ் பூரன் மற்றும் க்ருனால் பாண்டியா அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள்.
டெல்லி பவுலர் கலீல் அஹ்மத் பவுலிங்கில் நிக்கோலஸ் பூரன் 36(21) அதிரடி பேட்டிங் முடிவுக்கு வந்தது, அதன் பின் இறுதியாக களமிறங்கிய ஆயுஷ் படோனி அதிரடியில் 20 ஓவர்கள் முடிவில் 193 ரன்கள் பதிவு செய்தது. இந்த போட்டியில் இரு அணிகளும் 20 வது ஓவரில் தங்கள் இம்பாக்ட் பிளேயரை களமிறக்கினார்கள்.
டெல்லி அணி சார்பில் பவுலர் கலீல் அஹ்மத் இடத்தில் அமன் கான் களமிறக்கப்பட்டார், அதேபோல் லக்னோ அணி சார்பில் கிருஷ்ணப்பா கௌதம் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லக்னோ அணி அளித்த 194 ரன்கள் இலக்கை அடைந்து ஐபிஎல் 2023 ஆம் தொடரில் வெற்றியை பெறுமா ..?? அல்லது லக்னோ அணி வெல்லுமா .?? என்பதை பொறுத்திருந்து காண்போம்.