கவுதம் கம்பீர் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் பரபரப்பு..!! விராட் கோலி VS கம்பீர் மோதல் ..??? | lsg mentor gambhir viral tweet

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் கவுதம் கம்பீர் சமீபத்தில் இணையத்தில் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஐபிஎல் 2023 அரங்கில் இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் மிகவும் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், முதல் கட்ட லீக் போட்டியில் தோல்வியை தழுவிய அணிகள் தற்போது திருப்பி கொடுக்கும் வகையில் அதிரடி ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வரிசையில் அனைவராலும் மிகவும் பேசப்பட்ட போட்டியாக அமைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டி தான் என்று கூறினால் மிகையில்லை.
இந்த 2023 தொடரில் முதல் கட்ட லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டியில் கே எல் ராகுல் தலைமையில் ஆன லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. அப்போது லக்னோ அணி வீரர்கள் மிகவும் அதிரடியான வகையில் வெற்றியை கொண்டாடினார்கள், மேலும் மிகவும் பரபரப்பாக நடந்த போட்டியில் பெங்களூரு அணியின் ஹோம் கிரௌண்டில் நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது பெங்களூர் அணி ரசிகர்களுக்கு சோகத்தை அளித்தது.
அதன்பின் அண்மையில் மீண்டும் இரண்டாம் கட்ட லீக் சுற்றில் லக்னோ அணியின் ஹோம் கிரௌண்டில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் பாப் டு பிளெஸிஸ் தலைமையில் ஆன பெங்களூர் அணி வெற்றி பெற்றது. அப்போது பெங்களூரு அணியின் முன்னணி வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் வீரர்களுக்கு இடையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
லக்னோ அணியின் ஆலோசகராக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இடையில் சற்று காரசார விவாதம் ஏற்பட்டதை காண முடிந்தது. அப்போது அருகில் இருந்த இரு அணி வீரர்களும் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து சென்ற சம்பவங்கள் அரங்கேறியது.
இந்நிலையில் லக்னோ அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் இணையதளத்தில் பக்கத்தில் பதிவிட்ட பதிவு வைரல் ஆகி வருகிறது. கம்பீர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு யாரை குறிக்கிறது என்பது தெளிவாக இல்லை என்றாலும், அண்மையில் விராட் கோலி மற்றும் கம்பீர் இருவருக்கும் இடையில் அரங்கேறிய சம்பவத்தை பற்றி தான் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது, மேலும் இந்த சர்ச்சைக்குரிய பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.