இறுதிவரை போராடிய பஞ்சாப் கிங்ஸ்..!! லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மிரட்டல் வெற்றி..!! | lsg defeated pbks in ipl 2023

ஐபிஎல் 2023 தொடரில் ஒரு அதிரடி போட்டியாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய போட்டி அரங்கேறியது, மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய கே எல் ராகுல் தலைமையில் ஆன லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
இன்று மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கை அதிர வைத்தார்கள், குறிப்பாக அதிரடி பேட்ஸ்மேன்கள் கைல் மேயர்ஸ் 54(24) , மார்கஸ் ஸ்டோனிஸ் 72(40) அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 257 ரன்கள் பதிவு செய்தார்கள், ஐபிஎல் தொடரில் 2வது அதிகபட்ச இலக்காக இந்த பதிவாகி உள்ளது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் லக்னோ அணி அளித்த இலக்கை அடைய வேண்டும் என்ற அழுத்தத்தில் சற்று தடுமாறினார்கள்.
லக்னோ அணி சார்பில் பேட்டிங்கில் அசத்திய ஆல்ரவுண்டர் ஸ்டோனிஸ் பவுலிங் செய்து பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் 1(2) விக்கெட்டை பெற்று அசத்தினார். அதே சமயத்தில் பொறுப்புடன் விளையாடிய அதர்வ தைடே ரன்களை குவிக்க தொடங்கினார், குறிப்பாக பஞ்சாப் அணி பவர் பிளே முடிவில் 55 ரன்கள் பதிவு செய்தது.
அதன்பின் ஜோடி சேர்ந்து சிறப்பான விளையாடிய அதர்வ தைடே மற்றும் அனுபவ வீரர் சிக்கந்தர் ராசா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நம்பிக்கை அளித்தார்கள், குறிப்பாக அசத்தலாக விளையாடி வந்த அதர்வ தைடே ஐபிஎல் அரங்கில் 26 பந்துகளில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அதே சமயத்தில் லக்னோ பவுலர்களை சிதறடித்த பஞ்சாப் கிங்ஸ் வீரர் சிக்கந்தர் ராசா 36(22) ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த இளம் வீரர் அதர்வ தைடே 36 பந்துகளில் 66 ரன்கள் பெற்று லக்னோ பவுலர் ரவி பிஷ்னோய் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் சாம் கர்ரன் 21(11) மற்றும் ஜிதேஷ் சர்மா 24(10) சற்று அதிரடி காட்டி உடனுக்குடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
லக்னோ அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த யாஷ் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள். இறுதி வரை போராடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.5 ஓவரில் 201 ரன்கள் பதிவு செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.