ஐபிஎல் 2023 தொடரில் இருந்து கே எல் ராகுல் விலகல் ..!! சோகத்தில் ரசிகர்கள்…!! | lsg captain kl rahul ruled out of ipl 2023

ஐபிஎல் 2023 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே எல் ராகுல், கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து முழுமையாக விலகி உலர் என்று தெரிய வந்துள்ளது.
லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் பல அதிரடிகள் அரங்கேறிய நிலையில், லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பீல்டிங் செய்து கொண்டிருந்த நிலையில் தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் போட்டியில் இருந்து பாதியில் விலகினார். அதன்பின் போட்டியின் இறுதியில் அணிக்காக கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கி வெற்றிக்காக ராகுல் போராடினர்.
இந்நிலையில் தற்போது வெளியான தகவல் படி மும்பைக்கு பரிசோதனைக்காக சென்ற ராகுலை பரிசோதித்த மருத்துவர் குழு, இந்த காயம் முழுமையாக குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்று கூறினால் நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கே எல் ராகுல் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக லக்னோ அணி விளையாடி வரும் போட்டியில் கே எல் ராகுல் கலந்து கொள்ளாத நிலையில் அணியின் கேப்டனாக க்ருனால் பாண்டியா செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ள ராகுல் அடுத்து நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பது சந்தேகத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன் காயம் குணமாகி விரைவில் ராகுல் நலமடைய வேண்டும் இன்று இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.