31 வது பிறந்தநாளை கொண்டாடும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் கேப்டன் கே எல் ராகுல்..!! | lsg captain kl rahul birthday 2023

இந்திய அணியின் முன்னணி வீரராகவும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி கேப்டனாகவும் விளங்கும் கே எல் ராகுல் தனது 31 வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். கிரிக்கெட் உலகின் முன்னணி வீரர்கள் மற்றும் முன்னாள் ஜாம்பவான்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய அணிக்காக 2014 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் கே எல் ராகுல் பல போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று தந்துள்ளார், மேலும் முக்கிய முக்கியமாக 2013 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் கே எல் ராகுல் ஒரு மிரட்டல் வீரராக வலம் வருகிறார் என்று கூறினால் மிகையில்லை.
ஐபிஎல் தொடரில் 2022 ஆம் ஆண்டு முதல் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் கே எல் ராகுல் அசத்தல் வெற்றிகளை பெற்று முன்னணி கேப்டனாக திகழ்கிறார், நடப்பு ஐபிஎல் 2023 தொடரில் கே எல் ராகுல் தலைமையில் களமிறங்கிய லக்னோ அணி பங்கேற்ற 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் அரங்கில் அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கும் கே எல் ராகுல் 114 போட்டிகளில் விளையாடி 4 சதம் மற்றும் 32 அரைசதம் உட்பட 135.26 ஸ்டிரைக் ரேட்டில் 4044 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இந்திய அணிக்காகவும் கே எல் ராகுல் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் என அனைத்திலும் முன்னணி வீரராக திகழ்கிறார், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடத்தை கே எல் ராகுல் ஏற்கனவே பெற்று விட்டார் என்று கூறினால் மிகையில்லை.