IPL 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பௌலர் காயம் காரணமாக விலகல்..?? சோகத்தில் ரசிகர்கள்..!!

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடர் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், தொடரில் முக்கிய அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெளிநாட்டு பவுலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது கேள்வி குறியாகி உள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக அளவில் ரசிகர்கள் படை கொண்ட முக்கிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்கேற்று தொடரில் வெற்றிகளை பெற்று அசத்தும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நிலையில் அணியில் இடம்பெற்றுள்ள முன்னணி வீரர்கள் காயமடைத்து ஓய்வில் இருப்பது அணிக்கு பின்னடைவு தந்துள்ளது.
சென்னை அணி ஐபிஎல் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு தேவையான வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்திய நிலையில், அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் காயம் அடைந்து தொடர்ந்து அதிர்ச்சி அளித்து வருகிறார்கள், குறிப்பாக சென்னை அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய டி20 அணியில் இடம்பெற்ற பொழுது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு தற்போது ஓய்வில் உள்ளார்.
மேலும் சென்னை அணியின் முன்னணி வேகப்பந்து பவுலர் தீபக் சாஹர் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்து வருகிறார், அந்த வரிசையில் நியூசிலாந்து அணியின் வீரர் கைல் ஜேமிசன் தற்போது முதுகில் காயம் அடைந்து ஓய்வில் செல்ல உள்ளார், காயம் பெரிதாக இருந்தால் ஐபிஎல் பங்கேற்பது சந்தேகத்திற்கு கூறிய நிலையில் இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்கள்.
இந்த 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கண்டிப்பாக சிறந்த பங்களிப்பை அளித்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், முன்னணி வீரர்கள் பலர் காயமடைந்து அணிக்கு பின்னடைவு அளித்துள்ளார். இந்த தொடர் ஆரம்பிக்கும் முன் காயமடைந்த வீரர்கள் குணமடைந்து விரையில் அணியில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.