ஐபிஎல் 2023 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக குமார் சங்கக்கார தொடருகிறார் ..!!

ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் படையை கொண்ட சிறந்த அணியாக விளங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் இயக்குனர் என இரண்டு முக்கிய பதவிகளில் இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்கார செயல்பட உள்ளார் என்று அணி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற ராஜஸ்தான் அணி முழுவீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அணியின் பயிற்சியாளர் மற்றும் இயக்குனர் என இரண்டு பதவிகளிலும் குமார் சங்கக்கார பணியாற்ற உள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் அணியின் துணை பயிற்சியாளராக ட்ரெவர் பென்னி செயல்படுவார் என்று தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் விவரம் :
பயிற்சியாளர் : குமார் சங்கக்கார
துணை பயிற்சியாளர் : ட்ரெவர் பென்னி
துணை பயிற்சியாளர் : சித்தார்த்த லஹிரி
பீல்டிங் பயிற்சியாளர் : திஷாந்த் யாக்னிக்
பவுலிங் பயிற்சியாளர் : லசித் மலிங்கா
மன செயல்திறன் பயிற்சியாளர் : மோன் ப்ரோக்மேன்
யுக்தி செயல்திறன் இயக்குனர்: ஜூபின் பருச்சா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி : சஞ்சு சாம்சன் (கேப்டன் & வி.கீ), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மையர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக்,டிரெண்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின் யுஸ்வேந்திர சாஹல், கே சி கரியப்பா, ஜேசன் ஹோல்டர், டோனோவன் ஃபெராரா, குணால் ரத்தோர், ஆடம் ஜம்பா, கேஎம் ஆசிஃப், முருகன் அஸ்வின், ஆகாஷ் வஷிஷ்ட், அப்துல் பி ஏ, ஜோ ரூட்.
ஐபிஎல் 2023 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 2ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோடு பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.