கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் இடையே வெற்றி பயணத்தை தொடர போட்டி ..!! டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் ரெடி..!!

இந்திய மண்ணில் விமர்சையாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 ஆம் தொடரில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாட உள்ளார்கள். இந்த அதிரடி போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் வெளியானது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மிரட்டல் வெற்றியை பெற்று சிறந்த பார்மில் உள்ளது.அதே போல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் வெற்றி பயணத்தை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் கட்டாயம் இருப்பார்கள் என்பதால் ஒரு அதிரடி ஆட்டத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பௌலிங்கைத் தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன் : ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கீ), என் ஜெகதீசன், வெங்கடேச ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்) , ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன் : ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ராம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(வி.கீ), வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன்.
பிளேயிங் 11 போட்டியாளர்கள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): ரஹ்மானுல்லா குர்பாஸ்(டபிள்யூ), என் ஜெகதீசன், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், சுயாஷ் சர்மா, லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி