ஐபிஎல் 2023 : கொல்கத்தா அணியின் கேப்டனாக இளம் வீரர் தேர்வு..?? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!! | kkr next captain update

ஐபிஎல் தொடரில் முன்னணி அணியாக விளங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக இந்திய அணியில் கூட இடம்பெறாத இளம் வீரர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த முன்னணி இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் முதுகு பகுதியில் ஏற்பட்ட திடீர் வலி காரணமாக தொடரில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். இதனை அடுத்து கிடைத்த தகவலின்படி ஷ்ரேயஸ் ஐயர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா அணியை ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரில் வழிநடத்த புதிய கேப்டனை நியமிக்க அணி நிர்வாகம் சார்பில் முடிவெடுக்க பட்டுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக இளம் வீரர் ரிங்கு சிங் செயல்பட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணையதள பக்கத்தில் ரசிகர் ஒருவர் ரிங்கு சிங் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியதற்கு, அணி நிர்வாகம் சார்பில் எங்கள் கேப்டன் என்று பதிலளிக்க பட்டுள்ளது.இதனால் இந்திய அணியில் கூட இடம்பெறாத ரிங்கு சிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்க பட உள்ளாரா..?? என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் இடத்தில் பெரிய ஆச்சரியமும் குழப்பமும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் ரிங்கு சிங், இதுவரை 17 போட்டிகளில் 130.5 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி 251 ரன்கள் பதிவு செய்துள்ளார். மேலும் முதல் தர கிரிக்கெட்டில் 40 போட்டிகளில் 2875 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியில் பல முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அடுத்து யார் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 ஆம் தொடர் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏப்ரல் 1 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2023: ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங், நாராயண் ஜெகதீசன், வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா, டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, மன்தீப் சிங், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்.