ஐபிஎல் அரங்கில் விராட் கோலி உடைய சாதனையை இளம் வீரர் முறியடிப்பார்..!! ரவி சாஸ்திரி கணிப்பு..!! | kohli record update 2023

ஐபிஎல் தொடரில் முன்னணி வீரராக விளங்கும் ஆர்சிபி அணியின் விராட் கோலி அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன்களை குவித்து பல சாதனைகள் படைத்து உள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விராட் கோலி உடைய முக்கிய ஐபிஎல் சாதனையை இளம் வீரர் ஒருவர் முறியடிப்பார் என்று கூறியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்து விளையாடி வரும் ரன் மெஷின் விராட் கோலி பல தருணங்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றிகளை பெற்று தந்துள்ளார், குறிப்பாக 2016 ஆம் ஆண்டு விராட் கோலி தனது பார்மின் உச்சத்தில் இருந்தார்.
அந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை தனி ஒருவனாக மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார் விராட் கோலி, குறிப்பாக தொடரின் இறுதியில் 4 சதங்கள் பதிவு செய்து 973 ரன்கள் பதிவு செய்து ஆரஞ்சு கேப் பெற்று அசத்தினார். இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரில் யாராலும் முறியடிக்க முடியாத அசத்தல் சாதனையாக இது பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விராட் கோலி உடைய இந்த சாதனையை தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ஷுப்மன் கில் கட்டாயம் முறியடிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது இது பற்றி பேசிய ரவி சாஸ்திரி கூறியது, ஷுப்மான் கில் திறன் வாய்ந்த மிரட்டல் வீரர் குறிப்பாக தொடக்க வீரராக களமிறங்குகிறார். இதனால் சிறந்த பார்மில் உள்ள கில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் நல்ல ரன்களை பெற்றால் கட்டாயம் விராட் கோலி உடைய சாதனையை முறியடிப்பார் என்று கூறினார். இதுவரை ஐபிஎல் அரங்கில் 77 போட்டிகளில் விளையாடிய ஷுப்மான் கில் 32.52 சராசரியுடன் 126.24 ஸ்ட்ரைக் ரேட் இல் 2016 ரன்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.