ஒருநாள் தொடரில் உலக சாதனை படைக்க விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு..!! | kohli and rohit pair upcoming world record

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 3 வது ஒருநாள் போட்டியில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள், இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா முக்கிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது என்று தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற நிலையில் சமமாக உள்ளார்கள். இதனை அடுத்து 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
இந்த 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோழி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள், மேலும் இந்த போட்டியில் இந்த ஜோடி 2 ரன்கள் பெற்றால் முக்கிய உலக சாதனை படைக்கும் நிலையில் உள்ளார்கள். ஒருநாள் அரங்கில் தனித்தனியே ரோஹித் மற்றும் கோலி பல சாதனைகள் படைத்து உள்ள நிலையில், தற்போது இருவரும் இணைந்து ஜோடியாக முக்கிய சாதனையை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதாவது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி ஒரு நாள் தொடரில் இன்னும் 2 ரன்கள் பெற்றால், வேகமாக ஒருநாள் தொடரில் 5000 ரன்கள் பெற்ற ஜோடி என்ற சாதனையை படைக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஜோடி ஒருநாள் அரங்கில் இதுவரை 85 இன்னிங்சில் 4998 ரன்களை 62.47 சராசரியுடன் பெற்றுள்ளார்கள்,மேலும் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 60 சராசரிக்கு மேல் வைத்து 4000 ரன்களுக்கு மேல் பெற்ற ஒரு ஜோடி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் மற்றும் கோலி ஜோடி 2 ரன்கள் பெற்றால் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் கார்டன் கிரீனிட்ஜ் மற்றும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் உடைய நீண்ட நாள் சாதனையை முறியடிபார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கிரீனிட்ஜ் மற்றும் ஹெய்ன்ஸ் ஜோடி 97 இன்னிங்சில் 5000 ரன்கள் பெற்றது தான் ஒருநாள் அரங்கில் வேகமாக 5000 ரன்கள் பெற்ற ஒரு ஜோடியின் உலக சாதனையாக உள்ள நிலையில் பதிவாகி உள்ளது,எனவே இதை முறியடிக்க கோலி மற்றும் ரோஹித் ஜோடிக்கு பெரிய வாய்ப்பு உள்ளது.
இந்த 3 வது ஒருநாள் போட்டியில் ரோகித் மற்றும் கோலி ஜோடி 5000 ரன்கள் பெற்றால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஓபனிங்கில் களமிறங்காத ஒரு ஜோடி செய்யும் சாதனையாக பதிவாகும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் சென்னையில் நடைபெற உள்ள கடைசி ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னணி வீரர்கள் ரோஹித் மற்றும் விராட் கோலி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வார்கள் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.